ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரபலமான கிளாமர் 125 பைக்கின் புதிய மாடலின் சோதனை ஓட்ட படங்களின் மூலம் க்ரூஸ் கண்ட்ரோல், 4.2 அங்குல கலர் tft கிளஸ்ட்டர் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் இடம்பெற்றுள்ளது.
125சிசி சந்தையில் ஹீரோ நிறுவனத்தின் சந்தை மதிப்பை அதிகரிக்க அடுத்த அதிரடி திட்டங்களை செயல்படுத்த துவங்கியுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் 125சிசி கிளாமரில் க்ரூஸ் கண்ட்ரோல் எனப்படுகின்ற சீரான வேகத்தில் பயணிக்க உதவுகின்ற அமைப்பில் ரைட் பை வயர் நுட்பத்துடன் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹீரோவின் பிரீமியம் பைக்குகளில் கூட இதுவரை க்ரூஸ் கண்ட்ரோல் வழங்கப்படாத நிலையில், முதல் ஹீரோ மாடலாக க்ரூஸ் கண்ட்ரோலை கிளாமர் பெற உள்ளது.
எக்ஸ்ட்ரீம் 250ஆர், எக்ஸ்பல்ஸ் 210 உள்ளிட்ட பைக்குகளில் இருந்து பெறப்பட்டுள்ள கிளஸ்ட்டர் கண்ட்ரோல் சுவிட்களுடன் 4.2 அங்குல கலர் TFT கிளஸ்ட்டர் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறக்கூடும்.
குறிப்பாக வரவுள்ள மாடலின் டிசைன் தொடர்பான மாற்றங்கள் குறித்து எந்த உறுதியான படமும் கிடைக்கவில்லை. இருந்தாலும் நவீனத்துமான எல்இடி ஹெட்லைட் உட்பட ஏபிஎஸ் என பலவற்றை கொண்டிருக்கலாம்.
image source – Rushlane