Automobile Tamilan

க்ரூஸ் கண்ட்ரோலுடன் 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V அறிமுகமானது

hero xtreme 160r 4v onroad

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக்கில் கூடுதலாக க்ரூஸ் கண்ட்ரோல் உடன் ரைடிங் மோட் மற்றும் புதிய எல்இடி ஹெட்லைட் ஆனது பிரசத்தி பெற்ற எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கினை தழுவியதாக அமைந்துள்ளது.

தற்பொழுதுள்ள மாடலை விட ரூ.15,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ள நிலையில், இந்நிறுவனத்தின் கிளாமர் எக்ஸ், எக்ஸ்ட்ரீம் 125ஆர் போன்றவற்றை தொடர்ந்து மூன்றாவது மாடலாக க்ரூஸ் கண்ட்ரோலை பெற்றுள்ளது.

ரைட் பை வயர் நுட்பத்துடன் கூடிய புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக்கில் 163.2cc ஏர்-ஆயில் கூல்டூ என்ஜின் அதிகபட்சமாக 8500rpm-ல் 16.9 hp பவர் மற்றும் 6500rpm-ல் 14.5 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

புதிய LED ஹெட்லேம்ப் அமைப்பு, பெரிய Xtreme 250ஆரில் உள்ளதைப் போலவே தெரிகிறது. கூடுதலாக, எதிர்மறை LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் 250Rல் உள்ள அதே யூனிட்டாகத் தெரிகிறது. மற்ற மாற்றங்கள் ரைடு-பை-வயர் த்ரோட்டில், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ரோடு, பவர் மற்றும் ஈக்கோ மூன்று ரைடு மோடுகள் போன்ற புதிய அம்சங்களின் வடிவத்தில் வருகின்றன.

ஏபிஎஸ் உடன் 276 மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 220 மிமீ டிஸ்க் உள்ளது.  ட்யூபெலெஸ் டயர் இடம்பெற்று முன்பக்கத்தில் 100/80-17 மற்றும் 130/80-17 பின்பக்கத்தில் உள்ளது.

(ex-showroom)

Exit mobile version