ஏப்ரல் 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ள பாரத் ஸ்டேஜ் 6 (பிஎஸ்-6) மாசு உமிழ்வுக்கு இணையான இரு சக்கர வாகனங்களில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்ற 5 பைக்குகளை பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.
ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்
இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற இரு சக்கர வாகனங்களில் முதல் மூன்று இடங்களுக்குள் ஒன்றாக விளங்குகின்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எச்எஃப் டீலக்ஸ் பைக்கில் 100 சிசி என்ஜின் எக்ஸ்சென்ஸ் டெக்னாலாஜி (Xsens Technology – 10 சென்சார்களை) பெற்றதாக ஃப்யூவல் இன்ஜெக்ஷனை (Programmed Fuel Injection system) கொண்டு அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 7.94 பிஹெச்பி பவர் மற்றும் 8.04 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என்ஜினை கொண்டுள்ளது. மேலும் எரிபொருளை சேமிக்க i3S (idle start-stop system) நுட்பத்தை கொண்டுள்ளது.
பிஎஸ்6 ஹீரோ HF டீலக்ஸ் விலை பட்டியல்
செல்ஃப் ஸ்டார்ட் உடன் அலாய் வீல் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் மாடல் ரூ. 56,525
செல்ஃப் ஸ்டார்ட் உடன் அலாய் வீல் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் (கருப்பு) ரூ. 56,650
செல்ஃப் ஸ்டார்ட் அலாய் வீல் உடன் ஐ3எஸ் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் மாடல் ரூ. 57,750
(எக்ஸ்ஷோரூம் சென்னை விலை)
டிவிஎஸ் ஸ்போர்ட்
முன்பாக 100 சிசி என்ஜினை பெற்றிருந்த பிஎஸ்4 ஸ்போர்ட் பைக்கில் இப்போது 110சிசி என்ஜின் பெற்று பவர் அதிகபட்சமாக 8.17bhp மற்றும் 8.7Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. அதே நேரத்தில் இந்த மாடல் முந்தைய பிஎஸ்4 பைக்கினை விட 15 சதவீதம் வரை கூடுதலாக மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பபட்டுள்ளது.
பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்போர்ட் விலை ரூ. 52,350 (கிக் ஸ்டார்ட்) மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் ரூ. 59,525 (எக்ஸ்ஷோரூம் சென்னை) ஆகும்.
டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ்
இந்தியாவின் மிக குறைந்த விலை மற்றும் எடை குறைந்த ஸ்கூட்டராக விளங்குகின்ற டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் 5 hp குதிரைத்திறன் மற்றும் 5.8Nm முறுக்கு விசை வெளிப்படுத்தும் 87.8 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த எடையை பெற்ற ஸ்கூட்டர் மாடலாக 95 கிலோ மட்டும் பெற்றுள்ளது.
டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் விலை ரூ. 50,950 மற்றும் மேட் எடிஷன் ரூ.51,650 ஆகும்.
டிவிஎஸ் எக்ஸ்எல் 100
இந்தியாவின் மிகச் சிறந்த மொபட் மாடலான டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் எக்ஸ்எல் 100 மாடலில் 99.7சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 4.43 ஹெச்பி பவர் மற்றும் 6.50 என்எம் டார்க் வெளிப்படுத்தும். FI என்ஜினை பெற்றுள்ள இந்த மாடல் முன்பை விட 15 சதவீதம் கூடுதலான மைலேஜ் வெளிப்படுத்தும்.
பிஎஸ்6 டிவிஎஸ் எக்ஸ்எல் 100 விலை பட்டியல்
டிவிஎஸ் XL 100 – ரூ.43,889 (Heavy duty)
டிவிஎஸ் XL 100 – ரூ.45,129 (Heavy duty spl)
டிவிஎஸ் XL 100 – ரூ.45,459 (Comfort)
பஜாஜ் சிடி 100
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற இரு சக்கர வாகனங்களிலே மிகவும் விலை குறைந்த மாடல் என்றால் பஜாஜ் ஆட்டோவின் சிடி 100 பைக் மாடல்தான். இந்த மாடலில் 7.8 ஹெச்பி பவர் மற்றும் 8.34 என்எம் டார்க் வழங்கும் 102 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
பஜாஜ் சிடி 100 – ரூ. 41,306 (கிக் ஸ்டார்ட் )
பஜாஜ் சிடி 100 – ரூ. 48,736 (எலக்ட்ரிக் ஸ்டார்ட்)