சுசூகி இன்ட்ரூடர் 150 பற்றிய 5 முக்கிய விஷயங்கள் அறிவோம்

suzuki intruder bike launchedஇந்திய சந்தையில் இருசக்கர வாகன துறையில் 150சிசி க்கு மேற்பட்ட சந்தையை மிக வேகமான வளர்ச்சியை எட்டிவரும் நிலையில் சுசூகி நிறுவனம் மாடர்ன் பவர் க்ரூஸர் மாடலாக சுசூகி இன்ட்ரூடர் 150 என்ற பெயரில் ரூ.98,340 விலையில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

சுசூகி இன்ட்ரூடர் 150

 

சர்வதேச அளவில் சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் சுசூகி இன்ட்ரூடர் Z800 மற்றும் சுசூகி இன்ட்ரூடர் Z1800R ஆகிய இரண்டு சக்திவாய்ந்த க்ரூஸர் மாடல்களின் வடிவ தாத்பரியத்தை பெற்ற குறைந்தபட்ச எஞ்சின் பெற்ற இந்திய சந்தைக்கு ஏற்ற மாடலாக விற்பனைக்கு மிகவும் சவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிசைன்

இந்தியாவில் விற்பனையில் உள்ள குறைந்தபட்ச க்ரூஸர் ரக அவென்ஜர் மாடலுக்கு எதிராக மிகவும் சவாலான தோற்ற பொலிவினை வெளிப்படுத்தும் மாடர்ன் பவர் க்ரூஸர் இன்ட்ரூடர் 150 மாடலில் புராஜெக்டர் எல்இடி முகப்பு விளக்கு,எல்இடி டெயில் விளக்கு பெற்றிருப்பதுடன் பிரிமியம் தோற்ற பொலிவினை கொண்டுள்ளது.

170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்று 740 மிமீ இருக்கை உயரம் கொண்டுள்ளதால் பெரும்பாலான மக்களுக்கு ஏற்ற வகையிலும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளது.

எஞ்சின்

ஜிக்ஸெர் 150 பைக் வரிசையில் இடம்பெற்றுள்ள அதே எஞ்சினை இன்ட்ரூடர் மாடல் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. ஆற்றல் மற்றும் டார்க் ஆகியவற்றின் விபரங்கள் காணலாம்.

அதிகபட்சமாக 8000 ஆர்பிஎம் சுழற்சியில் 14.8 ஹெச்பி குதிரை திறன் மற்றும் 6000 rpm சுழற்சியில் அதிகபட்சமாக 14 என்எம் டார்க்கினை வழங்கும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

 

போட்டியாளர்

பஜாஜ் அவென்ஜர் 150 , பஜாஜ் அவென்ஜர் 220 ஆகிய மாடல்களுக்கு சவாலாக விளங்கும் வகையில் சுசூகி இன்ட்ரூடர் விளங்கும் வகையில் அமைந்துள்ளது. இது மட்டுமல்லாமல் உயர் ரக தண்டர்பேர்டு மற்றும் ரெனேகேட் ஆகியவற்றையும் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறப்பம்சங்கள்

ஜிக்ஸெர் பைக்கில் இடம்பெற்றுள்ள அதே சேஸீ கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இண்ட்ரூடர் 150 பைக்கின் மொத்த எடை 148 கிலோ ஆகும். மிக நேர்த்தியான கையாளும் திறன் கொண்டதாக அமைந்திருக்கின்ற இன்ட்ரூடர் 150 பைக் மைலேஜ் லிட்டருக்கு 44 கிமீ ஆகும்.

விலை

முன்புற சக்கரத்தில் ஏபிஎஸ் பிரேக் அம்சத்தை பெற்ற சுசூகி இன்ட்ரூடர் 150 பைக் விலை ரூ.98,340 விலையில் அமைந்திருக்கின்றது.

 

Exit mobile version