கவர்ச்சியான தோற்றமும், அதே சமயம் பல வருட நம்பகத்தன்மையும் இரண்டையும் ஒருங்கே பெற்ற ஹீரோ நிறுவனத்தின் கிளாமரின் அடுத்த பரினாம வளர்ச்சியான நவீன நுட்பங்களுடன் கிளாமர் எக்ஸ் 125 பைக்கில் கொடுக்கப்பட்ட க்ரூஸ் கண்ட்ரோல் என்ற வசதியால் புத்துணர்வு பெற்றுளதால் இதனை வாங்குபவர்கள் அவசியம் அறிய வேண்டியவற்றை அறிந்து கொள்ளலாம்.
2005-2006ல் அறிமுகம் செய்யப்பட்ட கிளாமர் 125 ஆனது சூப்பர் ஸ்பெளெண்டரின் என்ஜினை பயன்படுத்திக் கொண்டு நவீனத்துவமான டிசைனை பெற்றதால் மிக அதிக விற்பனையை சாத்தியப்படுத்தி தற்பொழுது வரை 80 லட்சத்துக்கும் கூடுதலான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
Glamour X என்ஜின் எவ்வாறு செயல்படுகின்றது ?
முன்பு வரை சூப்பர் ஸ்பிளெண்டர் என்ஜின் ஆனா இப்பொழுது எக்ஸ்ட்ரீம் 125 ஆர் என்ஜினை கிளாமர் எக்ஸ் பெறுவதற்கு காரணம் கூடுதல் பவர் மற்றும் சிறப்பான டார்க் வெளிப்பாடு அதே நேரத்தில் நல்ல மைலேஜ் என மூன்று காரணிகளையும் சாத்தியப்படுத்த ஹீரோ முயன்றுள்ள நிலையில், தினசரிப் பயணங்களின்போதும், கொஞ்சம் வேகம் தேவைப்படும் போதும் இந்த மேம்பாடு உண்மையிலேயே நமக்கு மகிழ்ச்சி தருவதாக மட்டுமல்ல அதிர்வுகளை கையாளுவதில் என பல இடங்களில் சிறப்பானதாக உள்ளது.
குறிப்பாக இந்த பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கின்ற க்ரூஸ் கண்ட்ரோலுக்கு ஏற்ற வகையிலான என்ஜினாக இருப்பது மேலும் பலமாக அமைவது லிட்டருக்கு 55 முதல் 58 கிமீ மைலேஜ் சாத்தியப்படுத்துகின்றது.
சேஸிஸ் மற்ற மெக்கானிக்கல் அம்சங்கள்
அடிப்படையில் கிளாமரின் சேஸிஸ் மிக சிறப்பானதாகவும் சமநிலைக்கு ஏற்ற நீண்ட தொலைவு பயணம், சுமைகளை கையாளும் திறன் போன்றவை நீண்ட நாட்களாக நிரூபிக்கப்பட்டு வருவதனால் அதனை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளதால் சேஸியின் அடிப்படையில் எந்தக் குறைபாடும் இல்லை.
0சஸ்பென்ஷனை குறை சொல்ல முடியாது, சஸ்பென்ஷனில் இன்னும் சற்று மேம்பாடாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும், பிரேக்கிங் அமைப்பு டயரின் ரோட் கிரிப் நன்றாக உள்ளது.
ரைடிங் மற்றும் கையாளுமை என அனைத்திலும் ஒட்டுமொத்தமாக இந்த கம்யூட்டர் 125சிசி பிரிவில் போட்டியாளர்களுக்கு சவால் விடுக்கவும், இளைய தலைமுறையினருக்கும் அதே சமயத்தில் குடும்பங்களுக்கான பயணங்களுக்கு ஏற்றதாக உள்ளது. ஆனால் ஏபிஎஸ் கொடுத்திருந்தால் இன்னும் பிரேக்கிங் அமைப்பில் மிகப்பெரிய பலமாக இருந்திருக்கும்.
ரைட் பை வயர், க்ரூஸ் கண்ட்ரோல் வேலை செய்யுதா ?
ரைடிங் மோடுகளில் ரோடு ஆனது சிறப்பான சாலை பயணத்தை உறுதி செய்வதுடன் நன்றாக இருக்கின்றது, கூடுதலாக உள்ள பவர் மோடு அதிகப்படியான வேகத்தை எட்ட மற்றும் அவசரகதியில் வாகனங்களை முந்த சிறப்பானதாக உள்ளது. மைலேஜ் சார்ந்த முறைக்கான ஈக்கோ மோடில் பைக்கின் பெர்ஃபாமென்ஸ் மிக குறைவாக உள்ளதை தெளிவாக உணர்ந்தேன்.
30 கிமீ வேகத்ததுக்கு மேல் உண்மையிலே க்ரூஸ் கண்ட்ரோல் சிறப்பான முறையில் இயங்குவதுடன் நெடுஞ்சாலைகளில் நல்ல அனுபவத்தை வழங்குகின்றது. குறிப்பாக அடிக்கடி நீண்ட தொலைவு ஹேவே பயணத்தை மேற்கொள்பவரகளுக்கு ஏற்றதாக உள்ளது. அதிக சிட்டி பயணங்களை மட்டுமே மேற்கொள்பவர்கள் டாப் மாடலுக்கு ரூ.10,000 வரை கூடுதலாக செலவு செய்ய தேவையில்லை. சிறப்பான வசதிகளுடன் கலர் எல்சிடி கிளஸ்ட்டரை வழங்கியுள்ள ஹீரோ நிறுவனம் கொடுத்துள்ளது.
கிக் ஸ்டார்டர் கொடுக்காத நிறுவனங்களும் மத்தியில் புதிய வசதி
பொதுவாக தற்பொழுது பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள், கிக் ஸ்டார்டர் கொடுப்பதை மிக பெரிய செலவாக கருதும் நிலையில், ஹீரோ புதிய முயற்சியாக பேட்டரி (Dead Battery) மிக குறைந்த வோல்டில் உள்ள சமயங்களில் செல்ஃப் இயங்காத நேரங்களில், ஒரே கிக்கில் கிளாமர் எக்ஸை ஸ்டார்ட் செய்ய ஏதுவாக திராட்டிள் பாடிக்கு தேவைப்படும் மின்சாரத்தை வழங்கி ஸ்டார்ட் செய்ய உதவுகின்றது.
இது மிகப்பெரிய அம்சம் க்ரூஸ் கண்ட்ரோலை கடந்து கவனிக்க வேண்டிய நுட்பம் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகயளவில் இது புதிய முயற்சியாக கருதப்படுகின்றது.
கிளாமர் எக்ஸ் வாங்கலாமா ?
நிச்சியமாக நல்ல சமநிலையான சேஸிஸ், நீண்ட தொலைவு பயணத்துக்கான நுட்பங்கள், கிக்ஸ்டார்டர் வசதி என பலவும் கவனிக்கதக்க முயற்சியாக உள்ளது. ஹீரோவின் நம்பகமான என்ஜின், மைலேஜ், கலர் கிளஸ்ட்டர் என பலவும் உள்ளது. ஒரு டெஸ்ட் ரைட் பன்னுங்க உங்களுக்கு தெரியும் கிளாமர் எக்ஸ் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யுமா என்பதனை பின்னர் முடிவெடுங்கள்.