Automobile Tamilan

இன்று ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210, எக்ஸ்பல்ஸ் 440 அறிமுகமாகிறது

hero xpulse 210 teased

2024 EICMA கண்காட்சியில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நடுத்தர சந்தைக்கான புதிய அட்வென்ச்சர் ரக மாடல் எக்ஸ்பல்ஸ் 440 மற்றும் புதிய எஞ்சின் பெற்ற எக்ஸ்பல்ஸ் 210 என இரு மாடல்களும் அறிமுகமாகிறது. இதுதவிர, மேவ்ரிக் 440 அடிப்படையில் ஸ்கிராம்பளர் 440, மற்றும் ஸ்போர்ட்டிவ் XTunt 2.5R , ஃபேரிங் ஸ்டைல் புதிய கரீஸ்மா XMR ஆகிய மாடல்களும் இன்றைக்கு வெளியாக உள்ளது.

ஹீரோ வீடா எலெகட்ரிக் பிரிவின் சார்பாக லினக்ஸ் மற்றும் குழந்தைகளுக்கான ஏக்ரோ என இரண்டு டர்ட் பைக்கினை வெளியிட உள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர் மூலம் எக்ஸ்பல்ஸ் 210 மாடலில் புதிய கரீஸ்மா XMR எஞ்சினை பெறுவது உறுதியாகியுள்ளது. TFT கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி அம்சத்துடன் புதிய 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் DOHC (Double Overhead Camshaft) அமைப்பினை பெற்று 9250rpm-ல் 25.5 hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.

எக்ஸ்பல்ஸ் 440 மாடலை பொறுத்தவரை அடிப்படையில் எக்ஸ்பல்ஸ் டிசைனின் பிரீமியம் அம்சங்களை பெற்று மேவ்ரிக் 440, ஹார்லி X440 என இரு மாடல்களில் இருந்து பெறப்பட்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது அதனை விட சற்று கூடுதலான பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தக்கூடும்.

இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு சந்தைகளுக்கு விரிவுப்படுத்த முக்கிய விபரங்களை ஹீரோ மோட்டோகார்ப் இன்றைக்கு EICMA 2024 அரங்கில் வெளியிட உள்ளது.

Exit mobile version