வரும் நவம்பர் 7 ஆம் தேதி EICMA 2023 மோட்டடார் ஷோவில் அட்வென்ச்சர் டூரிங் ஸ்டைலை கொண்ட ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கினை வெளியிட உள்ள நிலையில், புதிதாக தயாரிக்கப்பட்ட 452cc லிக்யூடு கூல்டு என்ஜினை பெறுகின்றது.
செர்பா 450 என்ற ஸ்கிராம்பளர் பைக்கினை கொண்டு வரவுள்ள நிலையில் அந்த பெயருடன் பயன்படுத்தி விற்பனையில் உள்ள ஹிமாலயன் LS 411 என்ஜின் டார்க்கினை ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.
New Royal Enfield Himalayan 450
புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 451.65cc லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 40 bhp பவருடன் டார்க் 40Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிள்ட்ச் கொடுக்கப்பட்டிருக்கும்.
காமெட் வெள்ளை, ஸ்லேட் பாப்பி ப்ளூ, ஸ்லேட் ஹிமாலயன் சால்ட், கஷா பிரவுன் மற்றும் ஹன்லே பிளாக் என 5 நிறங்களை ஹிமாலயன் 450 பெற உள்ளது.
ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையிலான ஹிமாலயனின் மாடலில் முன்பக்கத்தில் ஷோவா அப் சைடு டவுன் ஃபோர்க் வழங்கப்பட்டு முன்புற டயரில் 90/90 R21 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டு பின்புறத்தில் 140/80 R17 அங்குல வீல் டயர் இடம்பெற்றுள்ளது.
இரு பக்க டயர்களில் முன்பக்கத்தில் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது. மேலும் ரியர் ஏபிஎஸ் ஆனது சுவிட்ச் ஆஃப் செய்யும் முறையில் வழங்கப்பட்டுள்ளது.
வட்ட வடிவத்திலான டிஜிட்டல் முறையிலான கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு அனலாக் முறையிலான டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் இணைப்பினை ஏற்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ள கிளஸ்ட்டரில் டிரிப்பர் நேவிகேஷன், இசை, உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற இயலும்.
புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 விலை ரூ. 2.70 லட்சத்துக்குள் துவங்கலாம்.