பிரபலமான ஏதெர் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் இரண்டு வேரியண்ட் ரூ.20,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக இந்நிறுவனம் 450S என்ற பெயரில் குறைந்த விலை மாடலை அறிவித்துள்ளது.
சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஏதெர் 450s மாடல் சிங்கிள் சார்ஜில் 115கிமீ ரேஞ்சு வழங்குவதுடன் விலை ரூ.1,29,999 என நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கு முன்பதிவு ஜூலை முதல் துவங்க உள்ளது.
FAME-II மானியம் குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து விலை உயர்வு இருசக்கர வாகன தயாரிப்பாளர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது.
3.7 kWh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு 6.4 kW பவரை வெளிப்படுத்தி அதிகபட்சமாக 26 Nm டார்க் வழங்குகின்றது. தொடக்க நிலை வேரியண்டில் ஒற்றை ரைடிங் மோடு மட்டுமே பெற்றுள்ளது. டாப் 450X புரோ பேக்கில் Warp, Sport, Ride, Eco, மற்றும் SmartEco போன்ற ரைடிங் மோடுகள் உள்ளன. அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 146Km/charge வழங்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
450X இ-ஸ்கூட்டரின் பேஸ் வேரியண்டிலும் சார்ஜர் முறையை மாற்றியுள்ளது. முன்பாக ஏப்ரலில், அறிவிக்கப்பட்ட குறைந்த திறன் கொண்ட சார்ஜருடன் மூலம் 12 மணிநேரம் மற்றும் 15 நிமிடங்கள் (0 முதல் 80 சதவீதம் வரை) மற்றும் 15 மணிநேரம் மற்றும் 20 நிமிடங்கள் முழு சார்ஜ் ஆகும். இதனை நீக்கியுள்ளது. இதற்கு மாற்றாக இரு வேரியண்டிலும் ஒரே மாதிரியான சார்ஜர் முறையை கொண்டு வந்துள்ளது.
இப்போது, 700-வாட் சார்ஜர் அனைத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. இனி 0-80 சதவிகிதம் சார்ஜ் நேரமாக நான்கு மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகவும், 100 சதவிகிதம் சார்ஜ் நேரம் ஐந்து மணிநேரம் 40 நிமிடங்கள் போதுமானதாகும். கூடுதலாக ஏதெர் க்ரீட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை இரண்டு வேரியண்டுகளும் அனுகலாம்.
Ather Specification | 450X | 450X Pro-Packed |
Battery pack | 3.7 kWh | 3.7 kWh |
Top Speed | 90 Km/h | 90 Km/h |
Range (claimed) | 146 km | 146 km |
Riding modes | default | Warp, Sport, Ride, Eco, SmartEco |
புதிய தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம் விலை பட்டியல் பின்வருமாறு;-
ஏதெர் 450X base – ₹1,46,664
ஏதெர் 450X Pro Packed – ₹1,67,178
This post was last modified on June 1, 2023 11:37 AM