Automobile Tamilan

ஏதெர் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புதிய வேகமான டாட் சார்ஜர் அறிமுகம்

ather 450x escooter charging

ஏதெர் எனெர்ஜி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 450X மாடலில் உள்ள பேஸ் வேரியண்டிற்கு வீட்டு சார்ஜர் நேரத்தை 5 மணி நேரம் 40 நிமிடமாக குறைக்க 700-watt டாட் சார்ஜரை ரூ.7,500 சலுகை கட்டணத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

450X மற்றும் 450X pro-packed என இருவிதமாக விற்பனை செய்யப்படுகின்ற மாடலில் பேஸ் வேரியண்டில் வழங்கப்படும் 250-watt வீட்டில் சார்ஜிங் செய்தால் 15 மணி நேரமும் 20 நிமிடங்கள் தேவைப்படுகின்றது. இதனை குறைக்க வாடிக்கையாள்கள் தரப்பில் கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து புதிய 750-watt சார்ஜர் அறிவிக்கப்பபட்டுள்ளது.

Ather 450X charging

ஏதெர் 450x  பேட்டரி மின்சார ஸ்கூட்டரின் இரு வேரியண்டிலும் பொதுவான 3.7 kWh லித்தியம்-ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு 6.4 kW பவர் வழங்குகின்ற நிலையில் அதிகபட்சமாக 26 Nm டார்க் வழங்குகின்றது.

அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 146Km/charge வழங்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்நேரத்தில் முழுமையான சார்ஜில் 100Km/charge வரை வழங்கும்.

இரண்டு மாடல்களிலும் உள்ள முதல் வித்தியாசம் என்னவென்றால் ரைடிங் மோடு ஆகும். குறைந்த விலை மாடலில் Default மட்டுமே உள்ளது. ஏதெர் 450X புரே பேக் பெற்ற மாடலில் Warp, Sport, Ride, Eco,  மற்றும் SmartEco போன்ற ரைடிங் மோடுகள் உள்ளன. குறிப்பாக Wrap மோட் சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும்.

250-watt சார்ஜருடன் வழங்கப்பட்டு வந்த பேஸ் 450x வேரியண்டில் சார்ஜிங் நேரம் 15 மணி நேரம் 20 நிமிடங்கள் தேவைப்படும்.

750-watt சார்ஜரை தனியாக கூடுதல் கட்டணம் ரூ.7500 செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். இந்த விலை சலுகை குறிப்பிட்ட காலம் மட்டுமே கிடைக்கும்.  பிறகு விலை உயர்த்தப்படலாம்.

700-வாட் டாட் சார்ஜர் பயன்படுத்தினால் 4 மணிநேரம் மற்றும் 30 நிமிடங்களில் 0 முதல் 80 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும். மேலும், 5 மணி நேரம் 40 நிமிடங்களில் முழு சார்ஜ் செய்யலாம்.

ஏதெர் 450X விலை ₹ 1,16,379

ஏதெர் 450X Pro-Packed விலை ₹ 1,46,743

Exit mobile version