Home Bike News

ஜனவரி 2020-ல் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் விற்பனையை துவங்கும் பஜாஜ் ஆட்டோ

bajaj-chetak-electric

ஏறக்குறைய ஒரு மாதத்தில் 3,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு டெல்லி முதல் புனே வரை பயணித்த மின்சார பேட்டரியில் இயங்கும் பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் யாத்ரா இன்று நிறைவு பெற்றது. சேட்டகின் அறிமுகத்தின் போது 20 ஸ்கூட்டர்கள் இந்த பயணத்தை துவங்கியது.

பரவலாக இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் பஜாஜ் ஆட்டோவின் முதல் மின்சார ஸ்கூட்டர் ஜனவரி முதல் முன்பதிவு தொடங்கப்பட்டு அதே மாதத்தின் மத்தியில் புனே நகரத்தில் டெலிவரியும், அடுத்த சில மாதங்களில் பெங்களூருவிலும் பிறகு படிப்படியாக முன்னணி மெட்ரோ நகரங்களில் கிடைக்க துவங்க உள்ளது. இன்றைக்கு நிறைவு பெற்ற எலக்ட்ரிக் யாத்ராவில் 20 ஸ்கூட்டர்களும் 70,000 கிமீ பயணத்தை மேற்கொண்டுள்ளன.

புதிய சேட்டக்கில் ஐபி 67 சான்றிதழ் பெறப்பட்ட உயர் தொழில்நுட்ப லித்தியம் அயன் பேட்டரி NCA வசதியுடன் அமைந்துள்ளது. இது ஒரு நிலையான வீட்டு 5-15 ஆம்பியர் மின்சாரத்தின் மூலம் சார்ஜ் செய்வதற்கான அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்-போர்டு நுண்ணறிவு பேட்டரி மேலாண்மை அமைப்பு (ஐபிஎம்எஸ்) கட்டணம் மற்றும் வெளியேற்றத்தை தடையின்றி கட்டுப்படுத்துகிறது. சேட்டக் ஸ்கூட்டரில் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என இரண்டு ரைடிங் மோடுகளுடன் மற்றொரு ரிவர்ஸ் அசிஸ்ட் மோடும் வழங்கப்பட்டுள்ளது. மிக சிறப்பான வகைய்யில் பிரேக்கிங் சிஸ்டம் வழியாக ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டத்தை கொண்டுள்ளது.

சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் ஒன் சைடேட் ஸ்பீரிங் செட்டப் சஸ்பென்ஷனும், 12 அங்குல கேஸ்ட் அலாய் வீல் பெற்ற இந்த ஸ்கூட்டரில், முன்பக்க டயரில் டிஸ்க் பிரேக், பின்புறத்தில் டிரம் பிரேக் வழங்க்கப்பட்டு சிபிஎஸ் பிரேக் இணைக்கப்படலாம். மேலும் 90/90 எம்.ஆர்.எஃப் ஜேப்பர் கே டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4 கிலோவாட் மின்சார் மோட்டார் பொருத்தப்பட்டு ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என இரண்டு ரைடிங் மோடுகள் மற்றொரு ரிவர்ஸ் அசிஸ்ட் மோடும் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 60 கிமீ வேகத்தில் பயணிக்கின்ற ஸ்போர்ட் மோட் மூலம் 85 கிமீ பயண தூரத்தையும், அதுவே ஈக்கோ மோட் மூலம் 45-50 கிமீ வேகத்தில் பயணித்தால் 95 – 100 கிமீ வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் ரேஞ்சு 120 கிமீ ஆக அறிமுகம் செய்யப்படலாம்.

சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற உள்ள பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 3 வருட வாரண்டி அல்லது 50,000 கிமீ வழங்கப்படவும், பேட்டரியின் ஆயுள் 70,000 கிமீ ஆக விளங்க உள்ளது. மேலும், ஒவ்வொரு 15,000 கிமீ ஒரு முறை சர்வீஸ் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதீக பெர்ஃபாமென்ஸை வெறிப்படுத்துகின்ற கேடிஎம் மற்றும் ஹஸ்குவர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ராஜீவ் பஜாஜ் குறிப்பிட்டுள்ளார்.

ஏத்தர் 450ஓகினாவா பிரைஸ் சீரிஸ் மற்றும் வரவிருக்கும் டிவிஎஸ் க்ரியோன் போன்ற மாடல்களுக்கு சவாலாக விளங்க உள்ள பஜாஜ் சேத்தக் விலை ரூ.1.30 லட்சத்தில் அமையலாம். தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த ஆண்டின் மத்தியில் இந்த ஸ்கூட்டர் வெளியாகலாம்.

 

Exit mobile version