பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.22,000 வரை உயர்த்தப்பட்டு இப்போது ₹ 1,44,429 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. FAME-II மானியம் மாற்றியமைக்கபட்டுள்ளதால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு Kwh பேட்டரிக்கு மானியம் ரூ.10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சேட்டக் மானியம் ரூ.22,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சேட்டக் மாடலில் 3 கட்ட permanent magnet synchronous motor அதிகபட்சமாக 5 bhp பவர் மற்றும் 20 Nm டார்க் வழங்குகின்றது. இதன் அதிகபட்ச வேகம் 63km/hr ஆகும். சேட்டக் பேட்டரி மின்சார ஸ்கூட்டர் சிங்கிள் சார்ஜில் 108Km/charge ஆக உள்ளது.
2023 பஜாஜ் சேட்டக் பிரீமியம் வேரியண்ட் விலை ₹.1.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)
ஹில் ஹோல்ட் அசிஸ்ட், கீலெஸ் என்ட்ரி மற்றும் மொபைல் போன் யூஎஸ்பி சார்ஜர் போன்ற பல அம்சங்களுடன் MyChetak ஆப் பயன்படுத்தி ஸ்கூட்டரை உங்கள் மொபைலுடன் இணைக்க முடியும். இதன் மூலமாக சார்ஜிங் இருப்பு, ரேஞ்ச் சரிபார்க்க, வாகன நிறுத்துமிடம் உங்கள் ஸ்கூட்டரைக் கண்டறியப் பயன்படும்.