பாதுகாப்பு சார்ந்த சிபிஎஸ் எனப்படும் கம்பைன்டு பிரேக்கிங் அம்சத்தை பெற்ற குறைந்த விலை கொண்ட பஜாஜ் சிடி100 மற்றும் பஜாஜ் டிஸ்கவர் 125 பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் முதல் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பிரேக் பொருத்தப்பட்ட மாடல்களை மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என்ற பாதுகாப்பு சார்ந்த விதிகளுக்கு ஏற்ப புதிய மாடல்களை பஜாஜ் ஆட்டோ அறிமுகப்படுத்தியுள்ளது.
குறைந்த விலை பஜாஜின் சிடி 100 பைக்கில் ஸ்போக் வீல் , அலாய் வீல் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் என மொத்தமாக மூன்று விதங்களில் கிடைக்கின்றது. இந்த பைக்கில் எலக்ட்ரிக் ஸ்டார்ட் பெற்ற மாடல் 102 சிசி என்ஜினை கொண்டுள்ளது.
மற்ற இரு வேரியன்டுகளும் 99.3cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பெற்று அதிகபட்சமாக 8.08 BHP பவர் மற்றும் 8.05 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
சிடி100 சிபிஎஸ்
CT 100 CBS (spoke) – ரூ. 33,152/-
CT 100 CBS (alloy) – ரூ. 35,936/-
CT 100 CBS (alloy, electric start) – ரூ. 41,587/-
டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என இரண்டிலும் சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. 124.4cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பெற்று அதிகபட்சமாக 11 BHP பவர் மற்றும்11 Nm டார்க் வழங்குகின்றது.
Discover 125 (drum) – ரூ.. 58,003/-
Discover 125 (disc) – ரூ. 61,504/-
இரு மாடல்களிலும் சிபிஎஸ் பிரேக் தவிர வேறு எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…