விற்பனையில் கிடைத்து வருகின்ற டோமினார் 400 அடிப்படையில் உருவாக்கப்படுகின்ற குறைந்த விலை மாடலாக டோமினார் 250 பைக்கினை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பிப்ரவரி மாதம் வெளியிட உள்ளது.
சில வாரங்களுக்கு முன்பாக சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வந்த 250 சிசி என்ஜினை பெற்ற டோமினார் பைக்கில் இடம்பெற உள்ள மாடலின் முக்கிய விபரங்களை தற்போது கிடைத்துள்ளது. பொதுவாக பெரும்பாலான பாகங்கள் முந்தைய உயர் ரக டோமினாரில் இருந்து அனைத்தும் பெற்றிருக்கும். அதேநேரத்தில் சிறிய அளவிலான டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பெற உள்ளது.
சேஸ் உட்பட பெரும்பாலான டிசைன் அம்சங்களை பெறுவதுடன் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்கு, பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பெற்றதாகவும், அதேநேரத்தில் எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட் ஆப்ஷனை பெற்றிருக்கும்.
தற்போது விற்பனைக்கு கிடைத்து வருகின்ற கேடிஎம் 250 டியூக் பைக்கில் இடம்பெற்றுள்ள அதே 250 சிசி என்ஜின் பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்டு சற்று குறைவான பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தும். இதே என்ஜின் ஹஸ்குவர்ணா விட்பிலன் 250 மற்றும் ஸ்வார்ட்பிலன் 250 பைக்குகளிலும் இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில் இந்நிறுவன அதிகாரி ஒருவர் முன்னணி ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், பிப்ரவரி மாதம் விற்பனைக்கு வெளியாகும் என்பனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவில் கிடைக்கின்ற டோமினார் 400 விலை ரூ.1.90 லட்சமாக உள்ள நிலையில் புதிய டோமினார் 250 ரூ.1.50 லட்சத்தில் துவங்கலாம்.
உதவி – the hindu business line
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…