உலகின் முதல் சிஎன்ஜி பைக்கினை வெளியிட்டுள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஃப்ரீடம் 125 மாடலை 330 கிமீ ரேஞ்சை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் வெளிப்படுத்தும் நிலையில் தமழ்நாட்டில் விற்பனைக்கு எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதற்கட்டமாக மஹாராஷ்டிரா, குஜராத் என இரு மாநிலங்களில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.
ஃப்ரீடம் 125 சிஎன்ஜி மாடலில் உள்ள 125சிசி என்ஜின் அதிகபட்சமாக 9.7PS பவர் மற்றும் 9.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இணைந்து 330 கிமீ மைலேஜ் வழங்கும் நிலையில் சிஎன்ஜி எரிபொருள் மட்டும் 1 கிலோவிற்கு 100 கிமீ மைலேஜ் என இரண்டு கிலோவிற்கு 200 கிமீ மற்றும் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 65 கிமீ வெளிப்படுத்துவனால் 130 கிமீ கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது.
டிரம், டிரம் உடன் எல்இடி மற்றும் டிஸ்க் பிரேக் என மூன்று விதமான வேரியண்ட்டை பெறுகின்ற ஃப்ரீடம் 125 விலை ரூ.95,000 முதல் ரூ.1.10 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) அமைந்துள்ளது. குஜராத்திலும் மஹாராஷ்டிராவிற்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட மற்ற மாநிலங்களில் செப்டம்பர் 2024 அல்லது அக்டோபர் 2024 முதல் கிடைக்க துவங்கும்.
இந்தியா மட்டுமல்லாமல் ஃப்ரீடம் 125 மாடலை எகிப்து, தான்சானியா, கொலம்பியா, பெரு, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…