Automobile Tamilan

இந்தியாவில் பஜாஜ் பல்சர் 180 பைக் நீக்கப்பட்ட பின்னணி என்ன.?

3b854 2019 bajaj pulsar 180f

முன்பாக பல்சர் 180F பைக் பாதி ஃபேரிங் செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து விற்பனையிலிருந்து சாதாரன பல்சர் 180 பைக் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பாதி ஃபேரிங் பேனல்களை கொண்டு ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்ட பஜாஜ் ஆட்டோவின் பல்சர் 180F பைக் விற்பனைக்கு வெளியிடபட்டிருந்தது.

பஜாஜ் பல்சர் 180 பைக்

ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்படாத காரணத்தால் தற்காலிகமாக அல்லது நிரந்தமாக 180 பைக் நீக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு மாற்றாக உள்ள 180எஃப் பற்றி தொடர்ந்து காணலாம்.

ஏப்ரல் 1, 2019 முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஏபிஎஸ் பிரேக் தொடர்பான பாதுகாப்பு விதிமுறையை பெறுவதற்காக புதிய பல்சர் 180 பைக் வெளியாக உள்ளது. இந்த பைக்கில் சாதாரன பல்ஸர் 180 மற்றும் பல்சர் 180F என இரு வேரியன்ட்டுகள் இடம்பெறலாம்.

புதியதாக நியான் நிறம் சேர்க்கப்பட்டு அரை ஃபேரிங் செய்யப்பட்டதாக படத்தில் உள்ளது. மற்றபடி எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இடம்பெறுவதற்கான வாய்ப்பில்லை. இந்த பைக்கில் இடம்பெற்றுள்ள 17 PS பவர் வெளிப்படுத்துகின்ற 178 சிசி என்ஜின் டார்க்  14.2 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

முன்புறத்தில் 280 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டிருக்கும்.

பல்சர் 180 எஃப் பைக்கின் அதிகார்வப்பூர்வ விற்பனை தொடங்கப்பட்டுள்ள நிலையில் , சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்ற பஜாஜ் பல்சர் 180F மாடலின் விலை ரூ.87,450 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

Exit mobile version