புதிய பஜாஜ் பல்சர் 180F பைக் விற்பனைக்கு வெளியானது

0

 

2019 Bajaj Pulsar 180F

Google News

சமீபத்தில் வெளியாகியுள்ள பஜாஜின் புதிய பல்சர் 180F பைக்கின் பாதி ஃபேரிங் செய்யப்பட்ட மாடல் பல்சர் 220F போல அமைந்திருக்கின்றது. பல்சர் 180F பைக்கின் விலை ரூ. 87,450 ஆகும்.

பஜாஜ் பல்சர் 180F பைக் விலை

புதிதாக வெளியாகியுள்ள, புதிய பஜாஜ் பல்சர் 180 எஃப் பைக்கின் முக்கியமான தோற்ற விபரம் வெளிப்பட்டுள்ளது. இந்த தோற்ற அமைப்பானது விற்பனையில் உள்ள 220 எஃப் பைக்கினை போன்றதாக காணப்படுகின்றது.

ஏப்ரல் 1, 2019 முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஏபிஎஸ் பிரேக் தொடர்பான பாதுகாப்பு விதிமுறையை பெறுவதற்காக புதிய பல்சர் 180 பைக் வெளியாக உள்ளது. இந்த பைக்கில் சாதாரன பல்ஸர் 180 மற்றும் பல்சர் 180F என இரு வேரியன்ட்டுகள் இடம்பெறலாம்.

புதிதாக நியான் நிறம் சேர்க்கப்பட்டு அரை ஃபேரிங் செய்யப்பட்டதாக படத்தில் உள்ளது. மற்றபடி எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இடம்பெறுவதற்கான வாய்ப்பில்லை. இந்த பைக்கில் இடம்பெற்றுள்ள 17 PS பவர் வெளிப்படுத்துகின்ற 178 சிசி என்ஜின் டார்க்  14.2 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

முன்புறத்தில் 280 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டிருக்கும்.

பல்சர் 180 எஃப் பைக்கின் அதிகார்வப்பூர்வ விற்பனை தொடங்கப்பட்டுள்ள நிலையில் , சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்ற பஜாஜ் பல்சர் 180F மாடலின் விலை ரூ.87,450 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.