Automobile Tamilan

விரைவில்., பெனெல்லி இம்பீரியல் 400 பைக் இந்தியாவில் அறிமுகம்

Benelli Imperiale 400

என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலுக்கு நேரடியான போட்டியை எதிர்கொள்ள உள்ள பெனெல்லி இம்பீரியல் 400 பைக் உட்பட நான்கு மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

சமீபத்தில் பெனெல்லி லியோன்சினோ 500 மாடலை வெளியிட்டிருக்கின்ற இந்நிறுவனம், இந்தாண்டின் இறுதிக்குள் மேலும் சில குறைந்த விலை மாடல்களை வெளியிட உள்ளது. குறிப்பாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் ஜாவா பைக்கிற்கு நேரடி சவாலினை ஏற்படுத்தும் மற்றொரு மாடலாக இம்பீரியல் 400 விளங்க உள்ளது.

ரெட்ரோ ஸ்டைலை பெற்ற இந்த பைக்கில் முன்புறத்தில் வட்ட வடிவ ஹெட்லைட், வட்ட வடிவத்திலான இன்டிகேட்டர், க்ரோம் பூச்சு பெற்ற ஃபென்டணர், ஸ்போக்டூ வீல் உட்பட ட்வீன் பாட் கொண்ட இண்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை பெற உள்ளது.

இம்பீரியல் 400 பைக்கில் 373.5 சிசி ஒற்றை சிலிண்டர் SOHC என்ஜினை பெற்றிருக்கின்றது. இந்த என்ஜின் 19 பிஹெச்பி அதிகபட்ச சக்தியையும் 28 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. 5 வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இம்பீரியல் 400 பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பரினை பெற்று வருகிறது. இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்ட இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது.

மேலும் இந்நிறுவனம் இரண்டு 250சிசி என்ஜின் பெற்ற மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதுடன் கூடுதலாக ஸ்கூட்டர் மாடலையும் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 

Exit mobile version