கோயம்புத்தூர் மாநகரை தலைமையிடமாக கொண்ட பூம் மோட்டார்ஸ் நிறுவனம், 200 கிமீ ரேஞ்சை வழங்குகின்ற கார்பெட்-14 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ரூ.86,000 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் முதல் வெளியிடாக பூம் Corbett-14 ஸ்டாண்டர்ட் வேரியண்டின் விலை ₹ 86,999 மற்றும் EX வேரியண்டின் ₹ 1.20 லட்சம் வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. புதிய கார்பெட் 14 மாடலுக்கான முன்பதிவுகள் ஆன்லைனில் ₹ 499 துவங்கியுள்ளது. டெலிவரி ஜனவரி 2022 முதல் தொடங்கும்.
பூம் Corbett-14 விவரங்கள்
கார்பெட்-14 ஸ்டாண்டர்டு மாடலின் 3 கிலோவாட் மோட்டாரும், கார்பெட் 14-இஎக்ஸ் வேரியண்டில் 4 கிலோவாட் BLDC ஹப் மோட்டார் பயன்படுகின்றது. ஸ்டாண்டர்டு மாடலின் அதிகபட்ச வேகம் 65 kmph ஆகும், அடுத்தப்படியாக உள்ள EX வேரியண்டு அதிகபட்சமாக 75 kmph வரை செல்லும் திறனை பெற்றுள்ளது.
கார்பெட்-14 மின்சார ஸ்கூட்டரில் உள்ள ஒற்றை 2.3 kWh ஸ்வாப்பபிள் பேட்டரியைக் கொண்டு வீட்டிலேயே சார்ஜ் செய்யலாம் மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 100 கிமீ வரை செல்லும் என்று உறுதியளிக்கிறது.
கார்பெட் 14-இஎக்ஸ் வேரியண்டில் இரண்டு பேட்டரிகளை பயன்படுத்தலாம் என்பதனால், அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 200 கிமீ வரை பயணிக்கலாம்.
விரைவு சார்ஜருடன் 2.5 மணிநேரமும், சாதாரண சார்ஜரில் நான்கு மணிநேரமும் சார்ஜிங் நேரம் போதுமானதாக அமைந்திருக்கும்.
கார்பெட்-14 மாடல்களில் எல்இடி ஹெட்லேம்ப், 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட இருக்கைக்கு அடியிலான பூட் ஸ்பேஸ், CO2 உமிழ்வு குறைவு மற்றும் விபத்து/ திருட்டு கண்டறிதல் மற்றும் வேக வரம்புடன் கூடிய பெற்றோர் பயன்முறை வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டி டைவ் 4-புள்ளி முன் சஸ்பென்ஷன் மற்றும் பின்புற 4-புள்ளி அட்ஜெஸ்ட் இரட்டை ஷாக் அப்சார்பர் பயன்படுத்துகிறது. பிரேக்கிங் அமைப்பில் டிஸ்கு பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. பூம் மோட்டார் நிறுவனம் பேட்டரிக்கு 5 ஆண்டு உத்தரவாதத்தையும், கார்பெட்-14 டபுள் கார்டில் ஸ்டீல் சேஸ்க்கு 7 ஆண்டு உத்தரவாதத்தையும் வழங்குகிறது.