Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஆட்டோ எக்ஸ்போ 2020: பிஎஸ்6 சுஸூகி ஜிக்ஸர் வரிசை பைக்குகள் அறிமுகம்

by automobiletamilan
February 5, 2020
in பைக் செய்திகள், Auto Expo 2023

bs6-suzuki-gixxer-line-up-revealed

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பபாளரான சுஸூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியில்  பிஎஸ்6 சுஸூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF, ஜிக்ஸர் 250 மற்றும் ஜிக்ஸர் SF 250 அறிமுகம் பைக்குகளை வெளியிட்டுள்ளது.

பிஎஸ்6 பைக்குகளின் விலை மார்ச் மாத மத்தியில் அறிவிக்கப்பட உள்ளது. முன்பாகவே இந்நிறுவனம் சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் பிஎஸ்6 என்ஜினை கொண்டதாக விற்பனை செய்து வருகின்றது.

இரண்டு 250சிசி பைக்குகளிலும்  சுசுகி ஆயில் கூலிங் சிஸ்டம் (SOCS – Suzuki Oil Cooling System) நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக இணைக்கப்பட்டிருக்கும் எஸ்ஓசிஎஸ் மூலம் வாகனத்தின் எடை அதிகரிக்காமல் இலகு எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

249சிசி SOHC , 4 வால்வுகளை பெற்ற ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 26.5 ஹெச்பி பவரும் மற்றும் 22.6Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.

இரண்டு 155சிசி என்ஜின் பெற்ற ஜிக்ஸெர் மாடல்களிலும் 13.6 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் SF வரிசை பைக் என்ஜினில்  ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்று சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 13.8 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

250சிசி என்ஜினை பொறுத்தவரை பவர குறைக்கப்படவில்லை. ஆனால் 155சிசி என்ஜின் மாடல் பவர் குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்நிறுவனம் இன்ட்ரூடர் 150 மற்றும் பர்க்மேன் ஸ்கூட்டர் மாடலை பிஎஸ்6 முறைக்கு வெளியிட்டுள்ளது.

Tags: Suzuki Gixxer SF 250சுசுகி ஜிக்ஸர்
Previous Post

hero electric ae-47: 160 கிமீ ரேஞ்சு .., ஹீரோ எலெக்ட்ரிக் AE-47 மின்சார பைக் அறிமுகம்

Next Post

ஆட்டோ எக்ஸ்போ 2020: சிங்கிள் சார்ஜில் 400 கிமீ ரேஞ்சு.., மஹிந்திரா இஎக்ஸ்யூவி 300 வெளியானது

Next Post

ஆட்டோ எக்ஸ்போ 2020: சிங்கிள் சார்ஜில் 400 கிமீ ரேஞ்சு.., மஹிந்திரா இஎக்ஸ்யூவி 300 வெளியானது

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version