மஹிந்திரா குழுமத்தின் கீழ் செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆசிஷ் ஜோஷி அளித்த பேட்டியில் ”அடுத்த 18 மாதங்களில் மூன்று மாறுபட்ட பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜாவா பிராண்டில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ஜாவா மற்றும் ஜாவா ஃபார்டி டூ அறிமுகம் செய்து ஒரு வருடத்தை அடுத்த மாதம் கடக்க உள்ளது.
ஜாவா மோடார்சைக்கிள் நிறுவனம், இந்தியாவில் இரண்டு பைக்குகளை விற்பனை செய்து வருகின்றது. மேலும் கடந்த ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட ஜாவா பெராக் பாபர் ஸ்டைல் மாடலை அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வெளியிட வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் தி இந்து பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிர்வாக இயக்குநர் ஆசிஷ் ஜோஷி அளித்த பேட்டியில், கூடுதலான அளவில் மாடல்களை உருவாக்க விரும்புகிறோம். எனவே, வெவ்வேறு தொழில்நுட்பம் மற்றும் என்ஜின் கட்டமைப்பைக் கொண்ட மேலும் மூன்று ஜாவா பைக்குகளை அடுத்த 18 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும். நவம்பர் 15, 2019 அன்று எங்கள் முதல் ஆண்டுவிழாவில் தயாரிப்புத் திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை அறிவிப்போம். என குறிப்பிட்டுள்ளார்.
மூன்று மாடல்களில் ஒன்று ஜாவா பெராக் பாபர் ஸ்டைல் மாடலாகவும் மற்ற இரண்டு மால்களில் ஒன்று ஆஃப் ரோடு பைக்காகவும், மற்றொன்று கஃபே ரேசர் ஸ்டைல் பைக் மாடலாக விளங்க வாய்ப்புள்ளது.
சமீபத்தில் இந்நிறுவனம், ஜாவா பிராண்டில் வெளிவந்த முதல் மாடல் 500 OHV ஆனது 1929 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு ஜாவா சிறப்பு எடிஷன் பைக் மாடலில் 90 யூனிட்டுகள் மட்டும் வெளியிட உள்ளது.
நன்றி – TheHindu.com