ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டெஸ்டினி 125 அடிப்படையில் பிரைம் எடிசன் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக டீலர்களை வந்தடைந்த டெஸ்டினி பிரைம் விலை ரூ.78,448 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஹீரோ பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய 2023 ஹீரோ கிளாமர் 125 விற்பனைக்கு சில நாட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஹீரோ கரீஸ்மா 210 விற்பனைக்கு வெளியாக உள்ளது.
மற்ற விற்பனையில் உள்ள டெஸ்டினி 125 மாடலை வித்தியாசப்படுத்தும் வகையில், பாடி நிறத்திலான ரியர் வியூ மிரர், டிஜி அனலாக் கிளஸ்ட்டர், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், பூட் லைட், எல்இடி குயிட் லேம்ப் ஆகியவற்றை கொண்டதாக வந்துள்ளது.
வெள்ளை, சிவப்பு மற்றும் நீலம் என மூன்ற நிறங்களை பெற்று 125 சிசி புரோகிராம் செய்யப்பட்ட எஃப்ஐ இன்ஜின் ‘எக்ஸ்ஸென்ஸ் டெக்னாலஜி’ உடன் வருகிறது. 9 bhp பவரினை 7000 rpm-ல் மற்றும் 10.4 Nm டார்க்கினை 5500 rpm-ல் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
டெஸ்டினி பிரைம் இருபக்க டயர்களில் 130 மிமீ டிரம் பெற்று கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக உள்ளது. இருபக்கத்திலும் பொதுவாக 90/100-10 டயர் வழங்கப்பட்டுள்ளது.
(Ex-showroom Tamil Nadu)