Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

பிஎஸ்6 ஹீரோ டெஸ்டினி 125, மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது

by automobiletamilan
February 15, 2020
in பைக் செய்திகள்

bs6 mastero edge

125 சிசி ஸ்கூட்டர் சந்தையில் கிடைக்கின்ற ஹீரோ டெஸ்டினி 125 மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 என இரு மாடல்களும் பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணையான என்ஜினை பெற்று விற்பனைக்கு வெளியாகியுள்ளது. முன்பாக விற்பனை செய்யப்பட்ட பிஎஸ்4 மாடலை விட  ரூ. 6,000 முதல் அதிகபட்சமாக ரூ.7,500 வரை விலை உயர்ந்துள்ளது.

இரண்டு ஸ்கூட்டர்களும் 125 சிசி என்ஜினை பெற்று FI நுட்பத்துடன் கூடிய ஹீரோவின் 10 சென்சார் நுட்பத்தை (XSens Technology) கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெஸ்டினி 125 பிஎஸ்6 மாடலில் 125 சிசி புரோகிராம் செய்யப்பட்ட எஃப்ஐ இன்ஜின் ‘எக்ஸ்ஸென்ஸ் டெக்னாலஜி’ உடன் வருகிறது. 9 பிஹெச்பி பவரினை 7000 ஆர்.பி.எம் மற்றும் 10.4 என்எம் டார்க்கினை 5500 ஆர்.பி.எம்-ல் வழங்குகின்றது. 2020 டெஸ்டினி 125 பி.எஸ். 6 மாடல் 11 சதவீதம் அதிக எரிபொருள் சேமிப்பினை வழங்குகிறது.

மேலும் 10 சதவீதம் கூடுதலான வேகத்தினை வழங்கும் செயல்திறன், i3S தொழில்நுட்பம், (ஐடியல் ஸ்டார்ட் , ஸ்டாப் சிஸ்டம்). டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் புதிய எல்இடி கைட் விளக்கு மற்றும் குரோம் 3டி லோகோவைக் கொண்டுள்ளது. மேட் கிரே சில்வர் புதிதாக இந்த ஸ்கூட்டரில் இணைக்கப்பட்ட வண்ணமாகும்.

மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர்

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 பிஎஸ்6 மாடலில் 125 சிசி புரோகிராம் செய்யப்பட்ட எஃப்ஐ இன்ஜின் ‘எக்ஸ்ஸென்ஸ் டெக்னாலஜி’ உடன் வருகிறது. 9 bhp பவரினை 7000 ஆர்.பி.எம் மற்றும் 10.4 Nm டார்க்கினை 5500 ஆர்.பி.எம்-ல் வழங்குகின்றது. 2020 மேஸ்ட்ரோ எட்ஜ் 125 பிஎஸ்6 மாடல் 11 சதவீதம் அதிக எரிபொருள் சேமிப்பினை வழங்குகிறது.

இந்த ஸ்கூட்டரில் பிரத்தியேக பிரிஸ்மாடிக் பெயிண்ட் தொழில்நுட்பத்துடன் பிரிஸ்மாடிக் பர்பிள் (Prismatic Purple) நிறத்துடன் கிடைக்கிறது. மாறுபட்ட கோனங்களில் ஸ்கூட்டரின் நிறம் வித்தியாசப்படும். டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் தேர்வினில் கிடைக்கின்ற இந்த ஸ்கூட்டரில் புதிய எல்இடி லைட் சேர்க்கப்பட்டுள்ளது.

bs6 hero destini

பிஎஸ்6 ஹீரோ டெஸ்டினி 125 விலை பட்டியல்

BS6 Destini 125 LX: ரூ. 64,310

BS6 Destini 125 VX: ரூ. 66,800

பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விலை பட்டியல்

BS6 Maestro Edge 125 (Drum brake): ரூ. 67,950

BS6 Maestro Edge 125 (Disc brake): ரூ. 70,150

BS6 Maestro Edge 125 ( Disc brake and Prismatic Color Technology): ரூ. 70,650

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)

Tags: Hero Destini 125Hero Mastero Edge 125
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version