இத்தாலி நாட்டின் FB மோண்டியால் நிறுவனம் இந்திய சந்தையில் முதல் ஸ்க்ராம்பளர் பைக் மாடலாக எஃப்பி மோண்டியால் ஹெச்பிஎஸ் 125 விற்பனைக்கு வரவுள்ளது. ஹிப்ஸ்டெர் அல்லது HPS 125 என்ற பெயரில் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
சமீபத்தில் புனே அருகில் உள்ள ஆராய் ஆய்வு மையத்தில் சோதனை செய்யப்பட்ட HPS 125 பைக் படங்கள் வெளியானதை தொடர்ந்து இந்திய சந்தையில் விற்பனைக்கு வரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 125சிசி ஸடிரீட் ஸ்க்ராம்பளர் பைக் மாடலான ஹிப்ஸெடெர் 125 பைக்கில் அதிகபட்சமாக 15 bhp வரை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற இந்த மாடல் மிக சிறப்பான செயல்திறன் மற்றும் உயர்தர அனுபவத்தை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட மாடலாகும்.
முன்புறத்தில் 41 mm இன்வெர்டேட் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் சாக் அப்சார்பரை பெற்று விளங்கும், மோண்டியால் எச்பிஎஸ் 125 பைக்கில் 14 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்றிருப்பதுடன் 130கிலோ எடை கொண்ட மாடலின் முன்புறத்தில் 18 அங்குல சக்கரம், பின்புறத்தில் 17 அங்குல சக்கரம் பெற்றிருக்கின்றது.
1960-70 களில் பிரசத்தி பெற்ற மோட்டார் சைக்கிள் நிறுவனமாக விளங்கிய FB மோண்டியால் மிகவும் சிறப்பான கிளாசிக் ரக அம்சத்துடன் பல்வேறு மோட்டார்சைக்கிள்களை சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்து வரும் நிலையில் இந்திய சந்தையில் டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் அல்லது கைனெட்டிக் மோட்டார் ராயல் பிராண்டின் வாயிலாக இந்நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்க உள்ளது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…