குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கிடைக்க துவங்கியுள்ள கிரீன்வோல்ட் மாண்டிஸ் இ-மொபட் மாடலின் ஆரம்ப விலை ரூ.35,000 ஆகும். இந்த எலக்ட்ரிக் பைக்கை இயக்க லைசென்ஸ், பதிவெண் பெற வேண்டிய அவசியமில்லை. மின்சாரத்தில் இயங்கும் மாண்டிஸ் பைக் முதற்கட்டமாக அகமதாபாத்தில் மட்டும் கிடைக்கின்றது.
இந்த மாண்டிஸுக்கு 250 வாட் மின்சார மோட்டார் பொருத்தப்பட்ட இ-பைக்கில் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ ஆகும். எனவே, குறைந்த சக்தி வெளியீடு மற்றும் குறைந்த வேகம் காரணமாக, மான்டிஸை சவாரி செய்ய உங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. அதை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே இந்த இ பைக்கிற்கு எவ்விதமான அபராதமும் விதிக்க இயலாது. இந்த மாடலின் சிறப்பம்சமாக இலகுரக லித்தியம் அயன் பேட்டரி பேக் உள்ளது, இது நீக்கக்கூடிய வகையில் வழங்கப்பட்டு உள்ளதால் சார்ஜ் செய்ய வீட்டிற்குள் எடுத்துச் செல்ல இயலும். இந்த பேட்டரி பேக்கிற்கு 2.5 மணி நேரம் சார்ஜ் நேரம் தேவைப்படுகிறது மற்றும் முழுமையான சிங்கிள் சார்ஜில் 50 கிமீ வரை பயணிக்கும் வரம்பை வழங்குகின்றது. கிரீன்வோல்ட்டின் அறிக்கையின் படி, சுமார் 5 – 7 ரூபாய் கட்டணத்தில் 50 கிமீ பயணிக்கலாம்.
உங்கள் பயண தூரம் 45 கிலோ மீட்டருக்கு குறைவாக இருந்தால், கிரீன்வோல்ட் மான்டிஸ் குறைந்த கட்டண தினசரி பயணத்தை வழங்க ஏற்றதாகும். அதேவளை இந்நிறுவனம், அதிக ஆற்றல் மற்றும் நீண்ட ரேஞ்சு கொண்ட மாடல்களை தயாரித்து வருகின்றது. விரைவில் பெங்களூரு, ஹைத்திராபாத் மற்றும் முன்னணி மெட்ரோ நகரங்களில் கிடைக்க உள்ளது.