Automobile Tamilan

210 கிமீ ரேஞ்சு.., ஹீரோ எலக்ட்ரிக் Nyx-HX மின்சார ஸ்கூட்டர் வெளியானது

f42b6 hero electric nyx

இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் Nyx-HX மின்சார ஸ்கூட்டரை அதிகபட்மாக 210 கிமீ ரேஞ்சு வழங்கும் வகையிலான வர்த்தக ரீதியான தேவைகளுக்கு ஏற்ற மாடலாக வெளியிட்டுள்ளது.

பேட்டரியை நீக்கும் வகையிலான நுட்பத்தை கொண்ட ஹீரோ Nyx-HX ஸ்கூட்டரில் அதிகபட்ச வேகம் மணிக்கு 42 கிமீ ஆகவும், சிங்கிள் சார்ஜில் 82 கிமீ முதல் அதிகபட்சமாக 210 கிமீ வரை பயணிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. பேஸ் வேரியண்ட் மாடலின் ரேஞ்சு 82 கிமீ மட்டுமே ஆகும்.

B2B வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள Nyx-HX ஸ்கூட்டர் அதிகப்படியான எடையை இலகுவாக எடுத்துச் செல்லும் வகையில் உயர் டார்க் கொண்டிருப்பதுடன், 10க்கு மேற்பட்ட வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் கஸ்டமைஸ் செய்துக் கொள்ளலாம்.

மூன்று பேட்டரிகள் பொருத்தப்பட்டு மொத்தமாக 1.536kWh, 0.6 கிலோவாட் ஹவர் எலக்ட்ரிக் மோட்டார் உடன் ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் வந்துள்ள இந்த மின் ஸ்கூட்டரில் ஆன் டிமான்ட் அம்சத்தின் மூலமாக ரிமோட் கண்காணிப்பு மற்றும் சரிபார்த்தல் போன்றவற்றை மேற்க்கொள்ளலாம்.

ஹீரோ Nyx-HX ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.64,440 (FAME-2 மானியத்திற்கு பிறகு)

இந்நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது சிட்டி ஸ்பீடு ரேஞ்சு ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது.

web title : Hero Electric Nyx-HX Commercial Electric Scooter Launched

Exit mobile version