கூடுதல் ரேஞ்ச் வெளிப்படுத்துகின்ற புதிய ஹீரோ ஆப்டிமா ER மற்றும் ஹீரோ Nyx ER என இரு ஸ்கூட்டர்களை ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இரு பேட்டரி பேக் மூலம் இயங்குகின்ற இந்த மாடல்களில் ER எனப்படுவது Extended Range என குறிப்பிடப்பட்டுள்ளது.
முறையாக தொடர்ந்து பராமரிக்கும் பட்சத்தில் பேட்டரியின் ஆயுட்காலம் 5 வருடம் வரை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்டிமா இஆர் விலை ரூ .68,721 மற்றும் நைக்ஸ் இஆர் விலை ரூ .69,754 என இந்திய எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்னையம் செய்யப்படுள்ளது.
ஹீரோ எலக்ட்ரிக் கூறுகையில், இரட்டை லித்தியம் அயன் பேட்டரிகள் மூலம் மிக அதிக தொலைவு பயணிக்கும் ரேஞ்ச் வழங்குவது சாத்தியமாகிறது. வெறும் நான்கு மணி நேரத்தில் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யக்கூடிய இரட்டை பேட்டரிகள் இணைக்கப்பட்டுள்ளது. இரு மாடல்களும் அதிகபட்ச வேகம் மணிக்கு 45 கிமீ உடன் ஆப்டிமா ER ரேஞ்ச் 100 கிமீ ஆகவும், Nyx ER ரேஞ்ச் 110 கிமீ ஆக விளங்கும். சரியான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கொண்டிருந்தால் ஐந்து ஆண்டுகள் வரை பேட்டரி ஆயுளையும் நீட்டிக்க இயலும்.
இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வழக்கமான டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளன. பிரேக்கிங் இரு பக்க டயர்களிலும் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளது. பிற முக்கிய அம்சங்கள் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மற்றும் எல்இடி ஹெட்லைட் ஆகியவை அடங்கும்.
ஆப்டிமா இஆர் மற்றும் நைக்ஸ் இஆர் அறிமுகம் குறித்து பேசிய ஹீரோ எலக்ட்ரிக் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சோஹிந்தர் கில் கூறுகையில்:
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஹீரோ எலக்ட்ரிக் தயாரிப்புகளை வழங்க விரும்புகிறோம். நைக்ஸ் இஆர் மற்றும் ஆப்டிமா இஆருடன் நாங்கள் தொடர்ந்து பெற்றுள்ள கருத்து மூலம், அந்த சிக்கலை நாங்கள் நிவர்த்தி செய்கிறோம் மற்றும் செயல்திறன் மற்றும் பயன்பாட்டினை அதிகம் கொண்ட ஒரு தொகுப்பை வழங்குகிறோம். எங்கள் வரம்பை அதிகப்படுத்தவும், FAME II ஊக்கத் தொகை திட்டத்தின் மூலம் மலிவுப்படுத்திய வாடிக்கையாளர்கள் இதனை பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
ஆப்டிமா ER எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அலுவலகத்திற்குச் செல்வோர் மற்றும் கல்லூரி மாணவர்களை இலக்காகக் கொண்டு விற்பனை செய்யப்பட உள்ளது. அதே நேரத்தில், நைக்ஸ் ER சிறு வணிகங்கள், ஈ-காமர்ஸ் டெலிவரி மற்றும் ஈ-பைக் வாடகைகளின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.