Categories: Bike News

ஹீரோ இமேஸ்ட்ரோ மின்சார பேட்டரி ஸ்கூட்டர் அறிமுக விபரம்

bs6 mastero edge

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அடுத்த இலக்காக உள்ள எலெக்ட்ரிக் வாகனங்கள் உட்பட பல்வேறு உயர் ரக பிரீமியம் மோட்டார் சைக்கிள்களுக்காக ரூ.10,000 கோடி முதலீட்டை அடுத்த 5-7 ஆண்டுகளில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. ஹீரோ நிறவனத்தின் இமேஸ்ட்ரோ எட்ஜ் அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வரக்கூடும்.

சமீபத்தில் நடைபெற்ற ஹீரோ வோர்ல்டு 2020 நிகழ்வில் இந்நிறுவனம் தனது எதிர்கால மாடல்கள் குறித்து பல்வேறு முக்கிய விபரங்களை வெளியிட்டிருந்தது. குறிப்பாக  300சிசி க்கு கூடுதலான திறன் பெற்ற அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள், ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்துடன் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை போன்ற தகவல்கள் வெளியாகின இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்தான தகவல் முதன்முறையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பஜாஜ் மற்றும் டிவிஎஸ் என இரு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ள நிலையில், சுசுகி மோட்டார் சைக்கிள் அடுத்த ஆண்டு தனது முதல் மின் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது. இந்நிலையில் ஹீரோ நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரினை வடிவமைப்பினை பின்பற்றி இமேஸ்ட்ரோ என்ற கான்செப்ட்டை உருவாக்கியுள்ளது. இந்த மாடலின் ரேஞ்சு, பேட்டரி விபரம் குறித்து எந்த தகவலும் தற்போதைக்கு கிடைக்கப் பெறவில்லை. அனேகமாக இந்த ஸ்கூட்டர் 80 கிமீ முதல் 100 கிமீ ரேஞ்சு வழங்குவதுடன் ரூ.1 லட்சம் விலைக்குள் வரக்கூடும்.

image souce – auto.ndtv.com

ஹீரோ இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு எலெக்ட்ரிக் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரை கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது.

{
“@context”: “https://schema.org”,
“@type”: “FAQPage”,
“mainEntity”: [
{
“@type”: “Question”,
“name”: “ஹீரோ இமேஸ்ட்ரோ ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது ?”,
“acceptedAnswer”: {
“@type”: “Answer”,
“text”: “ஹீரோ மோட்டோகார்ப் இப்போது ஆரம்ப தயாரிப்பு நிலையில் இமேஸ்ட்ரோ மாடலை தயாரித்துள்ளதால், 2021 ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யலாம்.”
}
},
{
“@type”: “Question”,
“name”: “ஹீரோ மோட்டோகார்ப் இமேஸ்ட்ரோ ஸ்கூட்டர் விலை மற்றும் ரேஞ்சு?”,
“acceptedAnswer”: {
“@type”: “Answer”,
“text”: “இமேஸ்ட்ரோ ஸ்கூட்டர் விலை ரூ.1 லட்சத்திற்குள் அமையலாம். இதன் ரேஞ்ச் 80 கிமீ முதல் 100 கிமீ க்குள் வழங்கப்படக்கூடும்.”
}
}
]
}