ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், மீண்டும் இந்தியாவின் ஐகானிக் பைக் பிராண்டான கரீஸ்மா XMR மாடலை விற்பனைக்கு ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியிட உள்ளது. ஸ்போர்ட்டிவான டிசைனை பெற்று முதன்முறையாக லிக்யூடூ கூல்டு என்ஜின் மற்றும் 6 ஸ்பிடூ கியர்பாக்ஸ் பெற்ற ஹீரோவின் முதல் மாடலாக விளங்கலாம்.
முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்டுள்ள கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கில் 210சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே பக்கவாட்டின் வடிவமைப்பு வெளியாகியிருந்த நிலையில் அதனை உறுதிப்படும் வகையில் டீசர் வெளியாகியுள்ளது.
Hero Karizma XMR
210cc லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு கரீஸ்மா XMR அதிகபட்சமாக 25 Hp பவர் மற்றும் 35 Nm வரையிலான டார்க் வெளிப்படுத்துவதுடன், இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கும்.
எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், மற்றும் செட் ஆன் கிளிப் ஆன் ஹேண்டில் பார், டிஜிட்டல் கிளஸ்ட்டரில் கனேக்டேட் 2.0 வசதிகள், முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பருடன் இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றிருக்கலாம்.
இந்திய சந்தையில் கிடைக்கின்ற யமஹா ஆர்15, சுசூகி ஜிக்ஸர் SF, பஜாஜ் பல்சர் F250 ஆகியவற்றுடன் கேடிஎம் ஆர்சி200 போன்றவற்றை எதிர்கொள்ள உள்ள ஹீரோ கரீஸ்மா XMR விலை ரூ.1.60 லட்சத்தில் துவங்கலாம்.
மேலும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மீண்டும் ரித்திக் ரோஷனை விளம்பர தூதுவராக கரீஸ்மா XMR பைக்கிற்கு நியமித்துள்ளது. முழுமையாக விபரங்கள் 29-08-2023 வெளியாக உள்ளது.