Automobile Tamilan

இந்தியாவில் ஜீரோ எலக்ட்ரிக் பைக்கினை வெளியிட தயாராகும் ஹீரோ மோட்டோகார்ப்

zero sr sport electric bike

அமெரிக்காவின் ஜீரோ எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரின் பிரீமியம் பைக்குகளை இந்திய சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. ஜீரோ நிறுவனம் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் வீடா பிராண்டை அறிமுகம் செய்துள்ள நிலையில், ஏதெர் எனர்ஜி நிறுவனத்தில் 35 % பங்குகளை கொண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜீரோ மின்சார பைக் நிறுவனத்தில் சுமார் $60 மில்லியடன் (தோராயமாக ரூ 491 கோடி) முதலீடு செய்துள்ளது.

Zero Motorcycles

ஜீரோ மோட்டார்சைக்கிள் நிறுவனம், எலக்ட்ரிக் ஆஃப்-ரோடு பைக்குகள், மின்சார அட்வென்ச்சர் பைக்குகள், மின்சார ஸ்டீரிட் பைக்குகள், சூப்பர்மோட்டோ மற்றும் டூயல் ஸ்போர்ட் பைக்குகளை விற்பனை செய்து வருகின்றது.

இந்நிறுவனம் 7.2 kWh முதல் 17.3 kWh வரையிலான மாறுபட்ட பேட்டரி ஆப்ஷன்களை கொண்டு அமெரிக்காவில் $13,000 (ரூ.10.64 லட்சம்) முதல் $25,000 (ரூ. 20.46 லட்சம்) வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. இந்த பைக்குகள் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 301 கிமீ ரேஞ்சு மற்றும் ஒரு சில மாடல்களின் டாப் ஸ்பீடு 200Km/hr ஆக உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள மாடல்களின் விலை மற்றும் எந்த மாடல் வரும் போன்ற விபரங்கள் தற்பொழுது வெளியாகவில்லை.

சமீபத்தில், ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில், இந்தியாவில் உள்ள மின்சார பைக் ஆர்வலர்கள், ஜீரோ மோட்டார்சைக்கிள்களால் தயாரிக்கப்படும் உயர் செயல்திறன் கொண்ட மின்சார மோட்டார்சைக்கிள்களை விரைவில் பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளது.

மிக அதிகப்படியான விலை கொண்ட ஜீரோ எலக்ட்ரிக் பைக்குகள் இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் மூலம் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதனால் மிக சவலான விலையில் அமையலாம்.

Exit mobile version