பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இரண்டாவது ஆண்டாக GIFT (Grand Indian Festival of Trust) என்ற பெயரில் பல்வேறு சிறப்பு சலுகைகளுடன், பல்வேறு மாடல்களில் புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஆஃப் டிரஸ்டின் (GIFT) இரண்டாவது பதிப்பு நவீன மரபுகளுடன் கட்டுப்பாடற்ற கொண்டாட்டங்களை உள்ளடக்கியதாகவும், இந்த ஆண்டு பிரச்சாரத்தின் தீம் ‘இஸ் தியோஹர், நயி ரப்தார் என குறிப்பிட்டுள்ளது.
Hero GIFT
ஹீரோ இந்திய வர்த்தகப் பிரிவின் தலைமை வணிக அதிகாரி திரு. ரஞ்சிவ்ஜித் சிங் கூறுகையில், “Hero GIFT திட்டம் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டாடும் வகையில், நாட்டில் மிகவும் விரும்பப்படும் ஒவ்வொரு வீட்டின் பிராண்டாக, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததைக் கொண்டு வருவதில் ஹீரோ பெருமை கொள்கிறது. GIFT திட்டத்தின் மூலம், கவர்ச்சிகரமான நிதித் திட்டங்கள் மற்றும் குறைந்த வட்டி விகிதங்களுடன் கூடிய அற்புதமான மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளோம்.
பல்வேறு மாடல்களில் புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அவற்றின் விபரம் பின் வருமாறு;-
ஹீரோ ஜூம் LX வேரியண்டில் பேர்ல் ஒயிட் சில்வர், மேட் வெர்னியர் கிரேயில் பிளெஷர் LX, டீல் ப்ளூ மற்றும் மேட் பிளாக் நிறத்தை பிளெஷர் CX. பிளெஷர் VX ஆனது அனைத்து புதிய மேட் பிளாக் மற்றும் பேர்ல் சில்வர் ஒயிட், நெக்சஸ் நீலம், பேர்ல் ஒயிட் சில்வர் மற்றும் நோபல் ரெட் நிறங்களில் கிடைக்கும். அதே நேரத்தில் டெஸ்டினி பிரைம் மற்றும் டெஸ்டினி XTEC பேர்ல் ஒயிட் சில்வர் நிறத்தில் கிடைக்கும்.
HF டீலக்ஸ் பைக்கில் கேன்வாஸ் ஸ்டிரிப், சூப்பர் ஸ்பிளெண்டர் XTEC மாடலில் மேட் நெக்சஸ் ப்ளூ பெற்றுள்ளது. இது தவிர, ஸ்பிளெண்டர்+ ஸ்பிளெண்டர்+ XTec, பேஷன்+ மற்றும் பேஷன்+ எக்ஸ்டெக் மாடல்களில் பிளாக் கிரே மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே என இரு நிறங்களில் கிடைக்க உள்ளது.
ஹீரோ கிஃப்ட் மூலம் ரூ.5500 வரை ரொக்கப் போனஸ் மற்றும் ரூ.3000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் பை நவ், பே இன் 2024 நிதித் திட்டம் போன்ற பல புதிய திட்டங்களை வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு 6.99 சதவீத குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களைப் பெறுவதற்கான வாய்ப்பும் மற்றும் ஆதார் அடிப்படையிலான கடன்கள் மற்றும் பல்வேறு EMI முறைகளில் பெறலாம்.