Bike News

புதிய ஸ்டைலில் ஹீரோ டெஸ்டினி 125 அறிமுகம்

2024 Hero desini 125

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை கொண்டு வந்துள்ளது. மூன்று விதமான வேரியண்டுகளில் ஐந்து விதமான நிறங்களை பெறுகின்ற இந்த மாடலானது இளைய தலைமுறையினரை வெகுவாக கவரும் வகையிலான பல்வேறு டிசைன் அம்சங்களை கொண்டிருக்கின்றது.

புதிய டெஸ்டினி ஸ்கூட்டரில் 124.6cc ஏர்-கூல்டூ 4 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7000 rpm-யில் 9bhp பவர் மற்றும் 10.4Nm டார்க் ஆனது 5500 rpm இல் வழங்குகின்றது. சிவிடி கியர் பாக்ஸ் மூலம் ஏங்குகின்ற இந்த மாடலின் மைலேஜ் ஆனது இந்நிறுவனத்தின் தரவுகளின் படி லிட்டருக்கு 59 கிலோமீட்டர் கிடைக்கும் என சொல்லப்படுகின்றது.

முன்புறத்தில் டெலஸ்கோபிக் போர்க்கு பின்புறத்தில் ஹைட்ராலிக் ஸ்ப்ரிங் டைப் சிங்கிள் காயில் ஷாக்அப்சார்பர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. முன்பக்கத்தில் டிரம் அல்லது டிஸ்க் பிரேக் ஆப்ஷனும் 90/90-12 பின்புறத்தில் டிரம் பிரேக் மட்டும் பெற்று 100/80-12 அங்குல டயருடன் கம்ப்ளைன்ட் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ரெட்ரோ ஸ்டைல் பெற்று க்ரோம் அமைப்பு பெற்று டாப் ZX+ மாடலில் காப்பர் நிறத்துடன் எட்ரனல் வெள்ளை, ரீகல் பிளாக் என இரண்டு நிறங்களும் ZX வேரியண்டில் மிஸ்டிக்யூ மேக்னெட்டா, காஸ்மிக் ப்ளூ, மற்றும் குறைந்த விலை VX மாடலில் க்ரூவீ ரெட், எட்ரனல் வெள்ளை, ரீகல் பிளாக் என மூன்று நிறங்களும் எனவே ஒட்டுமொத்தமாக 5 வண்ணங்களை கொண்டிருக்கின்றது. இதில் வேரியண்ட வாரியாக நிறங்களானது மாறுபடுகின்றது.

ZX+,ZX என இரண்டு வகையிலும் முன்புறம் டிஸ்க் பிரேக், டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ஆட்டோ கேன்சல் டர்ன் இன்டிகேட்டர், ஒளிரும் இக்னிசன் சுவிட்ச், டைமண்ட் கட் அலாய் வீல் மற்றும் பின்புறத்தில் பேக் ரெஸ்ட் உள்ளது‌ கூடுதலாக டாப் ZX+ வகையில் க்ரோம் இன்ஷர்டில் காப்பர் ஃபினிஷ் உள்ளது. VX வகையில் டிரம் பிரேக் பெற்று டிஜி அனலாக் கிளஸ்டர் மட்டும் பெற்றுள்ளது.

2024 ஹீரோ டெஸ்டினி 125 மாடலுக்கு போட்டியாக டிவிஎஸ் ஜூபிடர் 125, ஹோண்டா ஆக்டிவா 125, யமஹா ஃபேசினோ, சுசூகி ஆக்செஸ் 125 போன்ற மாடல்கள் உள்ளன.