Automobile Tamilan

டிஸ்க் பிரேக்குடன் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtec அறிமுகமானது

hero splendor plus xtec disc brake

இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற டூவீலர் மாடலான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 2024 ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtech பைக்கில் கூடுதலாக டிஸ்க் பிரேக் வேரியண்ட் இணைக்கப்பட்டிருக்கின்றது.

தற்பொழுது வரை டிரம் பிரேக் மட்டுமே பெற்று வந்த இந்த 100 சிசி பைக் ஆனது இப்பொழுது டிஸ்க் பிரேக் ஆப்ஷன் மூலம் கூடுதலான ஒரு பாதுகாப்பு அம்சத்தை ஹீரோ ஏற்படுத்தியுள்ளது. மற்றபடி, எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.

முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புற 130மிமீ டிரம் பிரேக்குகளுடன், ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் இரண்டு சக்கரங்களின் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டத்துடன் வருகிறது. இந்த ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் 113.6 கிலோ எடையும், 9.8 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவு பெற்றுள்ளது.

தொடர்ந்து 97.2 சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 7.91bhp பவர் மற்றும் 8.05NM டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் நான்கு வேத கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

Xtec வேரியண்டில் முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மூலம் கால் , எஸ்எம்எஸ் அலர்ட், நிகழ் நேரத்தில் எரிபொருள் எவ்வளவு மைலேஜ் கிடைக்கின்றது என்பதை அறிந்து கொள்ளும் வசதி, எல்இடி பொசிசன் விளக்கு, 3டி ஹீரோ லோகோ என பல்வேறு அம்சங்களுடன் ஸ்பார்க்கிளிங் ப்ளூ, ரெட் பிளாக், பிளாக் டொராண்டோ கிரே ஆகிய மூன்று நிறங்களை பெறுகின்றது.

(Ex-showroom)

Exit mobile version