
அட்வென்ச்சர் சாகசங்களை 4 வயது முதலே கற்று கொள்ளும் வகையில் ஹீரோ உருவாக்கியுள்ள விடா Dirt.E K3 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆனது குழந்தையை போல வளரும் வகையில் வடிவமைக்கப்பட்டு 4-10 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு ஏற்றதாக EICMA 2025ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விடா இணையதளத்தில் இந்தியா மற்றும் ஐரோப்பாவில் ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து முதற்கட்ட பதிவு துவங்கப்பட்டிருந்தாலும், விலை தற்பொழுது அறிவிக்கப்படவில்லை. பர்பிள், வெள்ளை மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களில் கிடைக்கின்றது.
Hero Vida Dirt.E K3
சிறுவர்களுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டு டிர்ட்இ கே3 ஆனது பெற்றோரின் ஸ்மார்ட்போன் மூலம் இதன் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை சிறப்பு ஆப் மூலம் வழங்கப்பட்டு, எவ்வளவு வேகம் பயணிக்க வேண்டும், ஆக்சிலிரேஷன் ஆகியவற்றுடன் குறிப்பிட்ட எல்லை என அனைத்தும் பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
நீக்கும் வகையிலான பேட்டரி ஆனது 350wh மட்டும் கொடுக்கப்பட்டு அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ ஆக கட்டுப்படுத்தப்பட்டு இந்த விடா K3 பவர் ஆனது 1hp க்கும் குறைவாக 0.93hp அதாவது 500W மட்டுமே உள்ளது.
குழந்தைகள் வளருவதற்கு ஏற்ப அல்லது உங்கள் வீட்டில் இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு வயது சிறுவர்கள் இருந்தால் அவர்களின் உயரத்துக்கு ஏற்ப Small, Medium, மற்றும் Large என மூன்று விதமாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம், இதற்காக எங்கேயும் செல்ல தேவையில், இது தான் இந்த மாடலின் தனித்துவமாகும்.
DIRT.E K3 ஆஃப் ரோடு பைக்கிற்க்கு Red Dot Design Concept Award 2025 என்ற உலகப் புகழ்பெற்ற வடிவமைப்பு விருது வழங்கப்பட்டுள்ளது
ஏற்கனவே சில ஆண்டுகளாக இந்நிறுவனம் காட்சிப்படுத்தி வந்த லினக்ஸ், ஏக்ரோ அடிப்படையில் இந்த புதிய உற்பத்தி நிலையிலான மாடலுக்கு Dirt.e சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.





