
ஹீரோ நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிரசத்தி VX2 வரிசையில் உள்ள GO வேரியண்டிற்கு கூடுதலாக 3.4 kWh பேட்டரியுள்ள மாடல் விலை ரூ. 1.02 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல், முன்னர் அறிமுகமான VX2 2.2 kWh வேரியண்டடை விட அதிக ரேஞ்ச் பெற்று அதே அம்சங்களுடன் வருகிறது.
இந்த மின்சார ஸ்கூட்டர் 3.4 kWh நீக்கும் வகையிலான பேட்டரியுடன், முழு சார்ஜில் சுமார் 100 கிலோமீட்டர் வரை உண்மையான பயணம் செய்யும் திறனை வழங்குகிறது. இரு தனித்தனி பேட்டரி மாட்யூல்கள் வீட்டிலேயே சார்ஜ் செய்யலாம் என்பது இதன் முக்கிய சிறப்பாகும்.
2.2 kWh ஒற்றை பேட்டரி கொண்ட மாடல் உண்மையான ரேஞ்ச் 64 கிமீ ஆக உள்ளது. முன்பாக கிடைக்கின்ற மாடலை போலவே பவர் டாப் வேரியண்டிலும் 6 kW வெளிப்படுத்தும் மோட்டாருடன் 26 Nm டார்க் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிமீ வரை செல்லும் திறன் பெற்ற VX2 Go மாடலில் “Eco” மற்றும் “Ride” எனும் இரண்டு பயண முறைகள் வழங்கப்பட்டுள்ளன.
0-80 % சார்ஜிங் ஏறுவதற்கு விரைவு சார்ஜரை பயன்படுத்தினால் 62 நிமிடங்களும், 0-80 % பெற வழக்கமான வீட்டுமுறை AC சார்சரை பயன்படுத்தினால் 4 மணிநேரம் 13 நிமிடங்கள் ஆகும். இருபக்க டயரிலும் டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.
மேலும், இதன் முக்கியமான மற்றொரு அம்சமாக Battery-as-a-Service (BaaS) திட்டத்திலும் இதன் மூலம் பயனர்கள் பேட்டரியை நேரடியாக வாங்காமல், மாதாந்திர பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணத்தை செலுத்த முடியும். இது விலையை குறைத்து, அதிகமான பயனர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
BAAS திட்டத்தில் வாங்குவோர் ரூ.60.000 செலுத்தினால் போதும், அதேவேளையில் ஒவ்வொரு கிமீ பயணத்துக்கும் ரூபாய் 0.90 பைசா வசூலிக்கப்பட உள்ளது.
குடும்ப பயண்பாடுகளுக்கு ஏற்ற டிசைன், வசதியான இருக்கை, மேம்பட்ட டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்களுடன் வருகிறது. மொத்தத்தில், ஹீரோவின் இந்த புதிய மாடல், 27 லிட்டர் இருக்கை அடியிலான ஸ்டோரேஜ் வசதி கொண்டிருக்கின்றது.
- VX2 Go – ₹ 85,000
- VX2 Go 3.4kwh – ₹ 1,02,000
- VX2 Plus 3.4kwh – ₹ 1,10,000
(எக்ஸ்-ஷோரூம் விலை)

