Automobile Tamilan

ஹீரோ Xoom 110 காம்பேட் எடிசன் விலை மற்றும் விபரம்

hero xoom 110 combat edition

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற Xoom 110 ஸ்கூட்டரில் சிறப்பு எடிசனாக வெளியிடப்பட்டுள்ள Combat Edition ஃபைட்டர் ஜெட் விமானங்களின் தோற்ற நிறங்களை உந்துதலாக கொண்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக விற்பனையில் உள்ள XOOM ZX வேரியண்ட் அடிப்படையிலான வசதிகளை பெற்றுள்ள முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் முன்புறத்தில் கார்னரிங் விளக்கு, H- வடிவ எல்இடி ஹெட்லைட், 12-இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல், USB சார்ஜிங் போர்ட் மற்றும் பாடி கிராபிக்ஸ் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஜூம் 110 ஸ்கூட்டரில் உள்ள என்ஜின் 7250 ஆர்பிஎம்மில் 8 bhp பவர், 5750 ஆர்பிஎம்மில் 8.7 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் i3s நுட்பத்துடன் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் கொண்டு சிவிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

காம்பேட் எடிசனில் முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக்கினை பெற்று கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாகவும், முன்புற சஸ்பென்ஷன் டெலிஸ்கோபிக் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது. முன்புறத்தில் 90/90-12 54J மற்றும் பின்புறத்தில் 100/80-12 56L (VX,ZX and Combat) மற்றும் LX 90/90-12 54J பெற்றுள்ளது.

ZX வேரியண்ட்டை விட ரூ.1000 வரை விலை கூடுதலாக ஜூம் காம்பேட் எடிசன் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

(Ex-showroom Price in Tamil Nadu)

மேலும் படிக்க –  2024 ஹீரோ டெஸ்டினி 125 அறிமுக விபரம்

Hero Xoom combat edition image gallery

 

Exit mobile version