125cc சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ள பிரீமியம் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ள எக்ஸ்ட்ரீம் 125R பைக்கின் விலை ரூ.95,000 முதல் துவங்குகின்றது.
125சிசி சந்தையில் உள்ள பல்சர் NS125, டிவிஎஸ் ரைடர் 125 மற்றும் ஹோண்டா SP 125 உள்ளிட்ட பைக்குகளுடன் ஷைன் 125, பல்சர் 125, கிளாமர் 125 ஆகியவற்றையும் எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
Hero Xtreme 125R
இன்றைக்கு நடைபெற்ற ஹீரோ வோர்ல்டு 2024 அரங்கில் வெளியான புதிய மாடல் நாம் பிரத்தியேகமாக வெளியிட்ட ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள மேம்பட்ட புதிய ஸ்பிரின்ட் EBT 124.7cc ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 8,250rpm-ல் 11.40 hp பவர் மற்றும் 6,500rpm-ல் 10.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 0-60 கிமீ வேகத்தை எட்ட வெறும் 5.9 விநாடிகள் எடுத்துக் கொள்ளும்.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக்கின் மைலேஜ் 66 kmpl (WMTC BS VI – Worldwide Harmonized Motorcycle Test Cycle) தோனை முறையில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
டைமண்ட் சேஸ் கொடுக்கப்பட்டு ஸ்விங்கார்ம் டியூப்லர் முறையில் ஃபேபரிக்கேட் செய்யப்பட்டு பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் மற்றும் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளது.
பிரேக்கிங் அமைப்பில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம் என இருவிதமான முறையில் கிடைக்கின்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் முன்புறத்தில் 272 mm டிஸ்க் (ABS) அல்லது 240 mm டிஸ்க் (CBS) பெற்று பின்புறத்தில் 130 mm டிரம் பிரேக் கொண்டுள்ளது. ட்யூப்லெஸ் டயர் பெற்றுள்ள முன்பக்கம் 90/90-17 மற்றும் பின்புறத்தில் ரேடியல் டயர் 120/80-17 உள்ளது.
ஸ்டைலிங் அம்சங்களை பொறுத்தவரை தட்டையான எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் அதன் மேற்பகுதியில் எல்இடி ரன்னிங் விளக்குடன், எக்ஸ்ட்ரீம் பேட்ஜ் பெட்ரோல் டேங்க் மீதும் அதன் எக்ஸ்டென்ஷன் பகுதியில் 125R பேட்ஜ், ஸ்பிளிட் இருக்கை பெற்று ஸ்பிளிட் கிராப் ரெயில் கொண்டு பின்புறத்தில் டயர் ஹக்கர் உள்ளது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் கருப்பு, சிவப்பு மற்றும் ப்ளூ என மூன்று நிறங்களை கொண்டுள்ளது. பல்வேறு ஸ்டைலிஷ் அம்சங்களுடன் வந்துள்ள எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கில் டிஜிட்டல் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.
Hero Xtreme 125R Price list
- Xtreme 125R IBS ₹ 95,000
- Xtreme 125R ABS ₹ 99,500
(EX-showroom)