Automobile Tamilan

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R, டிவிஎஸ் ரைடர் 125 மற்றும் பஜாஜ் பல்சர் 125: எது சிறந்த 125cc ஸ்போர்ட்ஸ் பைக்?

Hero Xtreme 125R vs TVS Raider vs Bajaj Pulsar NS125 comparison

125cc ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் கிடைக்கின்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R, டிவிஎஸ் ரைடர் 125 மற்றும் பஜாஜ் பல்சர் NS125 ஆகிய முக்கிய போட்டியாளர்களின் பைக்குகளின் என்ஜின், டிசைன், நுட்பவிபரங்கள் மற்றும் ஆன்-ரோடு விலை ஒப்பிட்டு, உங்களுக்கு எது சிறந்தது என்பதை தீர்மானிக்க இந்த செய்தி தொகுப்பு உதவுகின்றது.

என்ஜின் மற்றும் செயல்திறன் ஒப்பீடு:

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R: புதியதாக சந்தைக்கு வந்துள்ள எக்ஸ்ட்ரீம் 125ஆர் மிக நேர்த்தியான பிரீமீயம் ஸ்டைலை கொண்டு நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற பயணங்களுக்கு ஏற்ற வகையிலும் சிறந்த கையாளுவதற்கு ஏற்ற வகையில் மிக ஸ்போர்ட்டிவான அனுபவத்தை வழங்கும் வகையிலும் பிரேக்கிங் திறனை மேம்படுத்த சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளது.

124.7cc ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 8,250rpm-ல் 11.40 hp பவர் மற்றும் 6,500rpm-ல் 10.5 Nm டார்க் வழங்குகின்ற மாடல் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 0-60 கிமீ வேகத்தை எட்ட வெறும் 5.9 விநாடிகள் எடுத்துக் கொள்ளும்.

டிவிஎஸ் ரைடர் 125: ஸ்டைலிஷான தோற்ற அமைப்பினை பெற்று இந்த பிரிவில் தற்பொழுது அமோக வரவேற்பினை பெற்றுள்ள ரைடர் 125 சிறப்பான ஹேண்ட்லிங் வழங்குவதுடன் நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளது.

124.8cc சிங்கிள்-சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7,500RPM-ல் 11.2 bhp பவர், 6,000RPM-ல் 11.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் செயல்திறன் 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 5.9 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

பஜாஜ் பல்சர் NS125: மிக ஸ்போர்ட்டிவான தன்மையை பெற்று பிரீமியம் பல்சர் பைக்கில் உள்ள டிசைனை பெற்று சிறப்பான நெடுஞ்சாலை மற்றும் நகர பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருப்பதுடன் போட்டியாளர்களை விட கூடுதலான பவரை வெளிப்படுத்துகின்றது.

பல்சர் NS125-ல் உள்ள 124.45 சிசி ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சின்  8,500 ஆர்பிஎம்மில் 12 hp  8,500 ஆர்பிஎம்-யில் மற்றும் 11Nm டார்க்கை வழங்குவதுடன் இந்த மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் கிடைக்கின்றது. 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 5.6 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

நுட்பவிபரம் Xtreme 125R Raider 125 Pulsar NS125
என்ஜின் 124.7 cc 124.8 cc 124.45 cc
சக்தி 11.4 bhp at 7,500rpm 11.2 bhp at 7,500rpm 11.8 bhp at 8,500rpm
டார்க் 10.5 Nm at 6,250rpm 11.2 Nm at 6,000rpm 11 Nm at 7,000rpm
கியர்பாக்ஸ் 5-speed 5-speed 5-speed
மைலேஜ் 66 kmpl 56.7 kmpl 46.9 kmpl
எடை 136 Kg 123 Kg 144 Kg

டிசைன்

ஸ்டைலிங் டிசைன் அம்சங்களில் புதிதாக வந்துள்ள எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கின் வடிவமைப்பு போட்டியளர்களை விட முன்னோடியாகவும் நவீனத்துவமான ஸ்போர்ட்டிவ் அம்சங்களை கொண்டு இளைய தலைமுறையினர் விரும்பும் வகையில் உள்ளது.

ரைடர் 125 பைக்கில் சிங்கிள் சீட் மற்றும் ஸ்பிளிட் சீட் என இரு விதமான இருக்கை அமைப்பினை பெற்று வலுவான நிறங்கள் மற்றும் குடும்பத்துக்கு ஏற்ற ஸ்டைலிங்கை பெற்றுள்ளது.

பல்சர் NS125 மாடலில் ஸ்போர்ட்டிவான இயல்புதன்மை, வலுவான பல்சர் பிராண்டின் மதிப்பினை பெற்றதாகவும் ஸ்பிளிட் சீட், சிறப்பான நிறங்களை பெற்றுள்ளது.

வசதிகள்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R: இந்த மாடலில் நெக்ட்டிவ் எல்சிடி டிஸ்பிளே, ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி அம்சம், ஸ்போர்ட்டிவான எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் பெற்று முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் கொண்டு சிபிஎஸ் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெறுகின்றது.

டிவிஎஸ் ரைடர் 125: எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு ப்ளூடூத் இணைப்பின் மூலம் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறுவதுடன் முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் கொண்டு சிபிஎஸ் மட்டுமே உள்ளது. இந்த மாடல் ஸ்பெஷல் எடிசன் உட்பட சிங்கிள் சீட் என நான்கு விதமான வேரியண்டில் உள்ளது.

பஜாஜ் பல்சர் என்எஸ்125: வழக்கமான டிஜி அனலாக கிளஸ்ட்டரை கொண்டு முனபுறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் கொண்டு சிபிஎஸ் பிரேக் மட்டுமே உள்ளது.

மூன்று 125cc பைக்குகளுமே டெலஸ்கோபிக் முன் ஃபோர்க் மற்றும் அட்ஜெஸ்டபிஃ பின்புற மோனோ ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டு 17-இன்ச் அலாய் வீல்களை பெற்றுள்ளது.

ஆன் ரோடு விலை ஒப்பீடு

மூன்று பைக்குகளுமே ஒன்றுக்கு ஒன்று விட்டுக்கொடுக்காமல் இருந்தாலும் கூடுதல் வசதிகள் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் குறைந்த விலை என போட்டியாளர்களை எக்ஸ்ட்ரீம் 125ஆர் முந்துகின்றது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R, டிவிஎஸ் ரைடர் 125 மற்றும் பஜாஜ் பல்சர் NS125 மூன்று பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் மற்றும் ஆன்ரோடு விலை (சென்னை, ஆனால் தமிழ்நாடு முழுமைக்கும் பொருந்தும். கூடுதல் ஆக்செரீஃ இணைக்கப்படும் பொழுது விலை மாறுபடும்)

தயாரிப்பாளர் எக்ஸ்ஷோரூம் விலை ஆன்ரோடு விலை
Hero Xtreme 125R ₹ 99,157- ₹1,04,657 ₹ 1,17,232-₹1,22,565
TVS Raider 125 ₹ 99,157 – ₹ 1,08,707 ₹ 1,17,252-₹ 1,31,297
Bajaj Pulsar NS125 ₹ 1,07,482 ₹ 1,30,054

 

எந்த 125cc ஸ்போர்ட்ஸ் பைக் தேர்வு செய்யலாம் ?

சிங்கிள் சேனல் ஏபிஎஸ், ரைட் ஹேண்ட்லிங், ஏரோடைனமிக்ஸ் உடன் ஸ்டைலிஷான வடிவமைப்பு, எல்சிடி கிளஸ்ட்டர் உடன் கனெக்ட்டிவ் வசதிகள், சிறப்பான மைலேஜ் லிட்டருக்கு 55 கிமீ எனவும் போட்டியாளர்களை விட குறைவான விலை மற்றும் தரம் என ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R சிறப்பான மாடலாக உள்ளது.

பல்வேறு மாறுபட்ட நிறங்கள், வலுவான ரைடிங் அனுபவம், எல்சிடி கிளஸ்ட்டர் கனெக்ட்டிவ் வசதிகள், 50 கிமீ மைலேஜ் என டிவிஎஸ் ரைடர் 125 நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

பஜாஜ் பல்சர் போட்டியாளர்களை விட குறைந்த வசதிகளை பெற்றிருந்தாலும் கூடுதலான பவர், சிறப்பான கையாளுதல் மற்றும் ஸ்போர்ட்டிவான அம்சம் ஆகியவற்றை பஜாஜ் பல்சர் என்எஸ்125 பெறுகின்றது.

தற்பொழுது உங்கள் தேவைக்கு ஏற்ற சிறந்த 125cc ஸ்போர்ட்டிவ் பைக்கின் ஒப்பீட்டை அறிந்து கொண்டுள்ளதால் மூன்று மாடல்களையும் டெஸ்ட் டிரைவ் செய்தால் உங்களுக்கான பட்ஜெட் விலையில் பைக்கினை தேர்வு செய்யலாம்.

Exit mobile version