புதிய பிரிமியம் மோட்டார் சைக்கிளான எக்ஸ்ட்ரீம் 200 ஆர்-ஐ நாடு முழுவதும் விற்பனை செய்ய உள்ளதாகவும், தொழிற்சாலைகளில் இருந்து அடுத்த வாரம் முதல் இந்த மோட்டார் சைக்கிள் டெஸ்பேச் செய்யும் பணிகள் தொடங்கும் என்று இந்தியாவின் மிகப்பெரிய டூவிலர் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.
பிரிமியம் மோட்டார் சைக்கிள் துறையில் மீண்டும் நுழைந்துள்ளதை குறிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த எக்ஸ்ட்ரீம் 200 ஆர், ஹீரோ நிறுவனத்தின் புதிய பிரிமியம் மோட்டார் சைக்கிள்களில் முதலாவது மோட்டார் சைக்கிளாக இது இருக்கும். இந்தாண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மோட்டார் சைக்கிளின் விலை 89,900 ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்).
இதுகுறித்து பேசிய ஹீரோ மோட்டோகார்ப், தலைவர் பவன் முன்ஜால், எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மோட்டார் சைக்கிள் அறிமுகம், மற்ற மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்வது போன்றது அல்ல. மீண்டும் பிரிமியம் துறையில் நுழைய இந்த மோட்டார் சைக்கிள் உதவியுள்ளதோடு, மார்க்கெட் ஷேர்-ஐ விரைவில் கைபற்றவும் உதவ உள்ளது. விரைவில் இந்த மோட்டார் சைக்கிள்களை சர்வதேச மார்க்கெட்களிலும் விற்பனைக்கு அனுப்ப உள்ளோம் என்றார்.
இந்த மோட்டார் சைக்கிள் 200cc ஏர்-கூல்டு இன்ஜின், 18.4ps மற்றும் அதிகப்பட்ச டார்க்யூவாக 17.1nm ஆற்றலை கொண்டது. இந்த இன்ஜின் மேம்படுத்தப்பட்டு 150cc-யாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் அதிகபட்ச வேகாமாக 114km/hr மற்றும் 0 முதல் 60km/hr வேகத்தை 4.6 செகண்டுகளில் தொட்டு விடும். இதுமட்டுமின்றி பஜாஜ் பல்சரில் உள்ளதை போன்று டிஜிட்டல் இன்ஸ்டுரூமென்ட் கன்சோல், ABS, இரண்டு டயர்களிலும் டிஸ்க் பிரேக், முதல் முறையாக ஹீரோ மோட்டார் சைக்கிள்களில் உருவாக்கப்பட்டுள்ள மோனோ ஷாக் அப்ஸார்பர், ரேடியல் வடிவிலான பின்புற டயர்களையும் கொண்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் ஐந்து டூயல் டோன் கலர் ஸ்கீமில் கிடைக்கும்.
இளைய தலைமுறையை குறிவைத்து தயாரிக்கப்பட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மோட்டார் சைக்கிள்கள், பஜாஜ் பல்ஸ்ர், ஹோண்டா யுனிகார்ன், யமஹா FZ, டி.வி.எஸ். அப்பாச்சி 200, சுசூகி இண்ட்ரூடர் 150 ஆகிய மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக இருக்கும் என்று தெரிவித்துள்ள ஹீரோ நிறுவனம், தங்களது அடுத்த தயாரிப்பாக பிரிமியம் மோட்டார் சைக்கிள் எக்ஸ்பிளஸ் 200 இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.