Categories: Bike News

இந்தியாவில் ஹோண்டாவின் 300-350cc பைக்குகள் ரீகால் அழைப்பு

new honda cb350

கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300 முதல் 350 சிசி சந்தையில் உள்ள CB300F, CB300R, CB350, H’ness CB350 மற்றும் CB350RS போன்ற மாடல்களுக்கு ரீகால் அழைப்பு விடுத்துள்ளது.

அக்டோபர் 2020 முதல் ஏப்ரல் 2024 வரை தயாரிக்கப்பட்ட மாடல்களில் ஏற்பட்டுள்ள வீல் ஸ்பீடு சென்சார் கோளாறின் காரணமாக பிழையான வேகம், தவறான வகையில் ஏபிஎஸ் இயக்கம் மற்றும் டிராக்சன் கண்ட்ரோல் போன்ற செயல்பாடுகளுக்கு சிறப்பான வகையில் இயங்காமல் சிக்கல்களை ஏற்படுத்த காரணமாக இதனுடைய வடிவமைப்பு அமைந்திருக்கின்றது இந்த வடிவமைப்பினால் இந்த சென்சார்களில் நீர் தேங்குவது பெரிய பிரச்சினையாக இருப்பதினால் இந்த பிரச்சனைக்காக திரும்ப அழைக்கப்பட்டுள்ள CB300F, CB300R, CB350, H’ness CB350 மற்றும் CB350RS போன்ற மாடல்களுக்கு முற்றிலும் இலவசமாக மாற்றி தரப்பட உள்ளது.

அடுத்த மிக முக்கியமாக கேம் ஷாஃப்டில் உற்பத்தி குறைபாடுடன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால் இந்த பாதிக்கப்பட்ட CB350, H’ness CB350 மற்றும் CB350RS  மாடல்களுக்கு இலவசமாக இந்நிறுவனம் மாற்றித் தருகின்றது. கேம் ஷாஃப்ட் கோளாறு உள்ள மாடல்களின் தயாரிப்பு தேதி ஜூன் 2024 முதல் ஜூலை 2024 வரை மட்டுமே ஆகும்.

உங்கள் வாகனம் பாதிப்படைந்து இருக்கின்றதா என்பதனை அறிய ஹோண்டா நிறுவனத்தின் பிக்வீங் டீலர்கள் அழைக்கலாம் அல்லது நீங்களே நேரடியாக ஹோண்டாவின் www.hondabigwing.in இணையதளத்தில் சென்று சர்வீஸ் கால் பகுதியில் உங்களுடைய வாகனத்தின் VIN என்னை கொண்டு அறிந்து கொள்ளலாம்.