ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் H-Smart எனப்படுகின்ற ரிமோட் கன்ட்ரோல் மூலம் பல்வேறு வசதிகளை வழங்கும் வேரியண்டை விற்பனைக்கு ₹ 92,165 ஆக நிர்ணையித்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பாக ஹோண்டா சைன் 100 மற்றும் ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் ஹெச் ஸ்மார்ட் வசதி என அறிமுகம் செய்திருந்தது. மேலும் வரும் மார்ச் 29 ஆம் தேதி ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளது.
புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் OBD-2 மற்றும் E20 உள்ளிட்ட அம்சங்களை பெற்ற 124cc ஒற்றை சிலிண்டர் எர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8.19 hp பவர் மற்றும் 10.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றதாக அமைந்துள்ளது.
ஆக்டிவா 6ஜி மாடலில் உள்ளதை போன்ற H-Smart வசதியை பெற்றுள்ள ஆக்டிவா 125 மாடலில் ஸ்மார்ட் கீ சாவி இல்லாத செயல்பாடுகளை வழங்குகின்றது. ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டு எரிபொருள் சிக்கனம், மைலேஜ் விபரம் மற்றும் எரிபொருள் இருப்பின் மூலம் தூரத்தை கண்காணிக்க முடியும்.
ஸ்மார்ட் ஃபைண்ட் – ஸ்கூட்டரை கண்டுபிடிக்கும் வகையில் நான்கு இண்டிகேட்டர்களும் ஒளிரும், ஸ்கூட்டரிலிருந்து 10 மீட்டருக்குள் இருந்தால், வாகனத்தின் இருப்பிடத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
ஸ்மார்ட் அன்லாக் – ஸ்கூட்டரிலிருந்து இரண்டு மீட்டருக்குள் இருந்தால், கைப்பிடியை லாக் திறக்கலாம், மேலும் பெட்ரோல் டேங்க் மூடி மற்றும் இருக்கையையும் திறக்கலாம்.
ஸ்மார்ட் சேஃப் – ஸ்கூட்டரில் இருந்து இரண்டு மீட்டருக்குள் இருப்பதால் உங்கள் ஸ்கூட்டரை இயக்கலாம். தூரம் அதிகரிக்கும் பொழுது ஸ்கூட்டர் தானாகவே பூட்டிக் கொள்ளும், ஒருவேளை ஸ்கூட்டரை லாக் செய்ய வேண்டும் என்றால் மூன்று வினாடிகளுக்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் இந்த அம்சத்தையும் செயல்படுத்தலாம்.
ஸ்மார்ட் ஸ்டார்ட் – கீ இல்லாமல் ஆக்டிவா 125 ஸ்கூட்டரை ஆன் செய்ய, ஸ்டார்ட் பட்டனை அழுத்தினால் போதும்.
மற்ற மெக்கானிக்கல் அம்சங்களில் , .ஸ்டாண்டர்டு வேரியண்டில் சைலண்ட் ஸ்டார்ட் சிஸ்டம் மற்றும் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை அடங்கும். இது டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்குகள், ஒற்றை பின்பக்க ஸ்பிரிங் மற்றும் முன்புறத்தில் டிஸ்க் அல்லது டிரம் பிரேக் பின்புறத்தஇல் டிரம் பிரேக் ஆப்ஷனை பெற்றுள்ளது.
2023 Honda Activa 125 (Ex-Showroom -chennai) | |
---|---|
ACTIVA 125 DRUM | Rs.82992 |
ACTIVA 125 DRUM ALLOY | Rs.86660 |
ACTIVA 125 DISC | Rs.90165 |
ACTIVA 125 H-SMART | Rs.92165 |