மணிக்கு 230 கிமீ வேகத்தை எட்டுகின்ற ஹோண்டா CB1000 Hornet SP மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் ரூபாய் 12.36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவு பிங்விங் டீலர்கள் மூலம் துவங்கப்பட உள்ளது.
CB1000 ஹார்னெட் SP பைக்கில் 999cc, இன்லைன் முறையில் 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 11,000rpm-ல் 155bhp பவர் 9,000rpm-ல் 107Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சின் ஆறு வேக கியர்பாக்ஸுடன் பை டைரக்ஷனல் க்விக் ஷிஃப்டர் இணைக்கப்பட்டுள்ளது.
CB1000 ஹார்னெட் பைக்கில் ஸ்போர்ட், ஸ்டாண்டர்ட் மற்றும் ரெயின் மற்றும் இரண்டு கஸ்டமைஸ் மோட் என 5 விதமான ரைடிங் மோடுகளுடன் வருகிறது. ஹோண்டா செலக்டபிள் டார்க் கட்டுப்பாடு உடன் புளூடூத் இணைப்புடன் 5-இன்ச் TFT டேஷ்போர்டு ஆகியவை சலுகையில் உள்ள பிற அம்சங்களுடன் மேட் பாலிஸ்டிக் பிளாக் மெட்டாலிக் நிறத்தை பெற்றுள்ளது.
அட்ஜெஸ்டபிள் 41 மிமீ ஷோவா USD ஃபோர்க்குகள் மற்றும் ஒரு ஓஹ்லின்ஸ் மோனோஷாக் பெற்றுள்ள பைக்கில் முன்புறத்தில் இரட்டை 310 மிமீ டிஸ்க்குகளுடன் ரேடியல் பொருத்தப்பட்ட நான்கு-பிஸ்டன் நிசின் காலிப்பர்களுடன், பின்புறத்தில், இது ஒற்றை நிசின் பிஸ்டன் காலிபருடன் ஒற்றை 240 மிமீ டிஸ்க் பெற்றுள்ளது.