Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

கிறங்கடிக்கும் ஹோண்டா க்ளிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது..!

by automobiletamilan
June 21, 2017
in பைக் செய்திகள்

ஸ்கூட்டர் சந்தையில் புதிய வரவாக ஹோண்டா நிறுவனத்தின் மற்றொரு ஸ்கூட்டர் மாடலாக ஹோண்டா க்ளிக் (Honda Cliq) ரூ. 42,499 விலையில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

Table of Contents

  • ஹோண்டா க்ளிக்
        • ஹோண்டா க்ளிக் குறிப்புகள்
          • Honda cliq Image Gallery

ஹோண்டா க்ளிக்

இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் மிகவும் சவாலான விலையில் ஊரக பகுதி மற்றும் வளரும் நகரங்களை குறிவைத்து புதிய கிளிக் ஸ்கூட்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக ராஜஸ்தான் மாநிலத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ள இந்ந ஸ்கூட்டர் நாடு முழுவதும் பண்டிகை காலத்துக்கு முன்தாக கிடைக்க உள்ள நிலையில் இதை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள தபுகாரா ஹோண்டா ஆலையில் க்ளிக் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

டிசைன்

ஊரக பகுதிகளில் பயணிக்கும் வகையில் மிக உறுதியான கட்டுமானத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள க்ளிக் மாடலில் முக்கிய அம்சமாக இந்தியாவின் முதல் பிளாக் பேட்டர்ன் பெற்ற டயரை பொருத்தப்பட்டதாக அறிமுகம் ஆகியுள்ளது.

கடுமையான மழை நேரங்களிலும், மோசமான சாலைகளில் பயணிக்கும் வகையிலான சிறப்பம்சத்தை பெற்றதாக பிளாக் பேட்டர்ன் டயர்கள் விளங்கும்.

102கிலோ எடை பெற்றுள்ள இந்த மாடல் இருபாலருக்கும் பொதுவான தோற்ற அமைப்பை பெற்றிருப்பதுடன் மிக அகலமான இடைவெளி கொண்ட கால் வைக்கும் பகுதியில் மிக சிறப்பான இடத்தை பெற்றிருப்பதுடன்,இருக்கையின் அடியில் 14 லிட்டர் கொள்ளளவு ஸ்டோரேஜ் உள்பட பின்புறத்தில் ஆப்ஷனலாக கேரியர் வைக்கப்பட்டுள்ளதால் பொருட்களை எடுத்துச் செல்ல எதுவான மாடலாக விளங்கும்.

எஞ்சின்

ஹோண்டா ஈக்கோ டெக்னாலஜி பெற்ற ஆக்டிவா ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

8 bhp ஆற்றல் மற்றும் 8.94 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 109.19சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடிகியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு மணி நேரத்துக்கு 83 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக கிளிக் ஸ்கூட்டர் விளங்குகின்றது.

சிறப்பு வசதிகள்

130 மிமீ டிரம் பிரேக்குடன் கூடிய ஈக்வலைஸர் வசதியுடன் காம்பி பிரேக்கிங் சிஸ்டத்தை பெற்றிருப்பதுடன் எந்த சூழ்நிலை கொண்ட சாலையிலும் பயணிக்கும் வகையிலான பிலாக் பேட்டர்ன் பெற்ற டயர்களுடன், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் ஆன், மொபைல் சார்ஜிங் சாக்கெட், கூடுதல் சுமை ஏற்றும் வகையிலான கேரியர் வழங்க்கப்பட்டுள்ளது.

சிவப்பு, வெள்ளை, கருப்பு மற்றும் கிரே என நான்கு விதமான நிறங்களில் ஹோண்டா க்ளிக் கிடைக்க உள்ளது.

விலை

தொடக்கநிலை 100-110சிசி சந்தையில் உள்ள ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றுக்கு சவாலாக விளங்கும் வகையில் ஹோண்டா இந்தியா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் உருவாக்கப்பட்டுள்ள ஹோண்டா க்ளிக் ஸ்கூட்டர் விலை ரூ. 42,499 எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை ஆகும்.

முதற்கட்டமாக ராஜஸ்தான் மாநிலத்தில் விற்பனை செய்யப்பட உள்ள க்ளிக் படிப்படியாக நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத மத்தியில் கிடைக்க பெறலாம்.

ஹோண்டா க்ளிக் குறிப்புகள்
  • 110சிசி எஞ்சின் பெற்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஸ்கூட்டராக க்ளிக் வந்துள்ளது.
  • முன்புறத்தில் உள்ள ஃபுளோர் இடைவெளி தவிர இருக்கையின் பின்புறத்தில் கேரியர் வாயிலாக சுமை ஏற்றும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஸ்கூட்டர் ஆகஸ்ட் முதல் தமிழ்நாட்டில் கிடைக்க பெறலாம்.
Honda cliq Image Gallery
Tags: CliqHonda Bikeக்ளிக்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version