பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹைனெஸ் CB350 லெகஸி , CB350 RS ஹியூ எடிசன் என இரண்டு விதமாக விற்பனைக்கு புதிய நிறங்கள் மற்றும் பாடி கிராபிக்ஸ் சேர்த்து அறிமுகம் செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள் இப்போது இந்த சிபி 350 ஸ்பெஷல் எடிசன் மோட்டார்சைக்கிள்களை தங்களுக்கு அருகிலுள்ள பிக்விங் டீலர்ஷிப்களில் முன்பதிவு செய்யலாம் மற்றும் டெலிவரிகள் விரைவில் நாடு முழுவதும் தொடங்கும்.
Honda CB350 Legeacy and CB 350 RS New Hue Edition
புதிதாக வந்துள்ள சிறப்பு எடிசனில் பாடி கிராபிக்ஸ் மற்றும் சில கூடுதல் நிறம் மட்டும் கொண்டுள்ள நிலையில், தொடர்ந்து 348.36சிசி லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 5500 RPM-ல் 20.8 பிஹெச்பி பவர் மற்றும் 3000 RPM-ல் 30 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்ற இன்ஜினில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
சிபி 350 பைக்கின் லெகசி எடிசனில், புதிய ஷைரன் நீல நிறத்தை கொண்ட மாடலில் 1970களின் புகழ்பெற்று விளங்கிய CB350 பைக்கிலிருந்து பெறப்பட்ட பேட்ஜ் ஆனது பெட்ரோல் டேங்கில் சேர்க்கப்பட்டு புதிய பாடி கிராபிக்ஸ் மற்றும் லெகசி எடிஷன் பேட்ஜைப் பெறுகிறது.
அடுத்து, CB350RS பைக்கில் புதிய ஹியூ எடிஷன் புதிய ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் அத்லெடிக் ப்ளூ மெட்டாலிக் என இரண்டு கவர்ச்சிகரமான நிறத்தை கொண்டு பெட்ரோல் டேங்க் ப்குதியில் புதிய கிராபிக்ஸ் மற்றும் இரு சக்கரங்களிலும் ஃபெண்டர்களிலும் ஸ்ட்ரைப்ஸ் கொண்டுள்ளது. பாடி நிறத்திலான பின்புற கிராப் ரெயில் மற்றும் ஹெட்லைட் கவர் ஆகியவற்றை கொண்டுள்ளது.
இரு பைக்கிலும் உள்ள கிளஸ்ட்டரில் ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி மூலம் ஸ்மார்ட்போன் இணைப்பினை ஏற்படுத்தி அழைப்புகள், மியூசிக், நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளுடன் டிரிப் மீட்டர், ரியல் டைம் மைலேஜ் அறியும் வசதி, சராசரி மைலேஜ், எரிபொருள் இருப்பினை அறியும் வசதி, கியர் பொசிஷன் இன்டிகேட்டர், பேட்டரி வோல்ட் மீட்டர் ஆகியவற்றை கொடுத்துள்ளது.
- 2023 Honda H’ness CB350 Legacy Edition – ₹. 2,16,356
- 2023 Honda H’ness CB350RS New Hue Edition – ₹ 2,19,357
[Ex-showroom]