Automobile Tamilan

ஹோண்டாவின் ஷைன் 100, ஷைன் 100DXயை விட சிறப்பானதா ஹீரோ HF டீலக்ஸ்.!

hero hf deluxe pro vs honda shine 100 and shine 100dx

ஹோண்டா வெளியிட்ட புதிய ஷைன் 100, ஷைன் 100டிஎக்ஸ் மாடலை விட குறைந்த விலையில் ஹீரோவின் HF டீலக்ஸ் ப்ரோ, HF டீலக்ஸ் மற்றும் HF 100 ஆகிய மாடல்களை ஒப்பீடு செய்து செய்து அறிந்து கொள்ளலாம்.

முதலில் விலைப் பட்டியல் ஒப்பீடு செய்து விலை வித்தியாசத்தை அறிந்து கொள்ளலாம். ஹோண்டாவின் 100சிசி ஷைன் பைக்குகளுடன் ஹீரோ நிறுவன HF வரிசை பைக்குகளை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம்.

100cc Bikes Price  on-road Price 
Hero HF100 Rs 57,918 Rs 72,086
Hero HF Deluxe Rs 64,218-70,250 Rs 79,068-86,124
Hero HF Deluxe Pro Rs 73,550 Rs 88,987
Honda Shine100 Rs 70,589 Rs 86,543
Honda Shine100DX Rs 76,809 Rs 92,254

குறிப்பாக ஹீரோ மோட்டோகார்பின் ஹெச்எஃப் டீலக்ஸ் மாடல்கள் விலை ரூ.72,086 முதல் ரூ.88,987 வரை அமைந்துள்ள நிலையில் போட்டியாளரான ஷைன் 100சிசி மாடல்கள் ரூ.86,543 முதல் ரூ92,254 வரை அமைந்துள்ளது. குறிப்பாக ஹெச்எஃப் டீலக்ஸ் புரோ மாடல் எல்இடி ஹெட்லைட் கொண்டதாகவும், டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ரூ89,000க்கு அமைந்திருப்பது மிகப்பெரிய பலமாகும்.

குறிப்பாக இந்தியாவின் நம்பகமான ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்டுகளே ரூ.90,000க்கு கூடுதலான விலையில் துவங்குவது குறிப்பிடதக்கதாகும்.

ஒவ்வொரு மாடல்களுக்கும் தனிப்பட்ட நன்மைகள் அமைந்திருந்தாலும் சில கூடுதலான வசதிகள் மற்றும் நவீன நுட்பங்கள் வாடிக்கையாளர்களுக்கான தேர்வுகளில் முக்கிய அம்சமாக உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

குறிப்பாக மூன்று ஹீரோ HF டீலக்ஸ் மற்றும் இரண்டு ஹோண்டா ஷைன் 100 என மொத்தமாக உள்ள 5 வகையில் ஹீரோவின் HF டீலக்ஸ் ப்ரோ வேரியண்டில் கொடுக்கப்பட்டுள்ள எல்இடி ஹெட்லைட், எல்சிடி கன்சோல் ஆகியவற்றை பெற்று டீ்யூப்லெஸ் டயரும் உள்ளது. ஆப்ஷனல் ஆக்செரீஸாக யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் கூடுதல் கட்டணத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஷைன் 100டிஎக்ஸ் மாடலில் ட்யூப்லெஸ் டயர், எல்சிடி கிளஸ்ட்டருடன் வழங்கப்பட்டுள்ளது.

வசதிகளில் ஒப்பீடும் பொழுது ரூ.2,500 வரை குறைந்த விலையில் பல்வேறு வசதிகளை ஹெச்எஃப் டீலக்ஸ் புரோ பெற்றுள்ளது.

எஞ்சின் ஒப்பீடு

அடுத்தப்படியாக எஞ்சினை பற்றி பார்க்கையில் ஹீரோவின் ஹெச்எஃப் வரிசை முதல் ஸ்பிளெண்டர் பிளஸ், பேஷன் பிளஸ் என பலவற்றிலும் உள்ள ஒரே  97.2cc ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர் க 8000 rpm-ல் 8.02 bhp பவரையும், 6000 rpm-ல் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஷைனில் 98.98cc என்ஜின் கொடுக்கப்பட்டு அதிகபட்சமாக 7.61 hp குதிரைத்திறன் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.

ஹீரோவின் HF டீலக்ஸின் மைலேஜ் லிட்டருக்கு சராசரியாக 65 முதல் 72 கிமீ வரை கிடைக்கும் நிலையில், ஹோண்டா ஷைன் 100சிசி பைக்குகளும் லிட்டருக்கு சராசரியாக 63 முதல் 70 கிமீ வரை வழங்குகின்றது.

விலை ஒப்பீடு, மைலேஜ் விபரங்கள், மற்ற சிறப்பு வசதிகள் என பலவற்றை ஒப்பீடு செய்துள்ளோம், நீங்கள் நேரடியாக அருகாமையில் உள்ள டீலரிடம் டெஸ்ட் டிரைவ் செய்து சிறந்த ஒற்றை தேர்ந்தெடுக்கலாம்.

Exit mobile version