Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.11.90 லட்சத்தில் ஹோண்டா X-ADV ஸ்கூட்டர் வெளியானது

by MR.Durai
21 May 2025, 12:56 pm
in Bike News
0
ShareTweetSend

ஹோண்டா X-ADV ஸ்கூட்டர்

இந்தியாவில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம்  பிரீமியம் ரக  X-ADV 750 ஸ்கூட்டரை ரூபாய் 11.90 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவு அனைத்து ஹோண்டா பிக்விங் டீலர்கள் வாயிலாக நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு ஜூன் 2025 முதல் டெலிவரியும் வழங்கப்பட உள்ளது.

சமீபத்தில் ரீபெல் 500 என்ற பிரீமியம் க்ரூஸர் ரக மாடலை அறிமுகம் செய்திருந்த நிலையில் தற்போது அடுத்த பிரிமியம் மாடலை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு பல்வேறு பிரிமியம் மாடல்களை இந்திய சந்தைக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.

Honda X-ADV

6 DCT எனப்படுகின்ற டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பெற்றுள்ள ஹோண்டாவின் X-ADV ஸ்கூட்டரில் 57.8bhp பவர் 6,750rpm-ல் மற்றும் 69Nm டார்க் ஆனது 4,750rpm-ல் வெளிப்படுத்தும் 745cc லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் ஆனது பொருத்தப்பட்டுள்ளது.

பேர்ல் கிளேர் ஒயிட் மற்றும் கிராஃபைட் பிளாக் என இரு நிறத்துடன் இந்த ஸ்கூட்டரின் மற்ற வசதிகளில் குறிப்பாக, ஹோண்டா செலக்டபிள் டார்க் கண்ட்ரோல் (HSTC) மற்றும் ஸ்டாண்டர்ட், ரெயின், ஸ்போர்ட் மற்றும் கிராவல் என நான்கு விதமான ரைடிங் முறைகளும்

மேக்ஸி ஸ்டைலை பெற்ற இந்த ஸ்கூட்டர் மாடலில் பல்வேறு நவீன அம்சங்கள் கொடுக்கப்பட்டு, எல்இடி ஹெட்லைட், ஹோண்டா ரோட்சின்க் ஆதரவுடன் கூடிய 5-இன்ச் TFT டிஸ்ப்ளே டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் எச்சரிக்கைகள் மற்றும் இசை மற்றும் குரல் வழி கட்டுப்பாட்டை வழங்குகிறது.

ட்யூப்லெர் ஸ்டீல் சேஸிஸ் கொண்ட எக்ஸ்-அட்வெ மாடலில் 41மிமீ, USD ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் கொண்டுள்ளது. இதன் முன்புறத்தில் 17-இன்ச்  மற்றும் 15-இன்ச் உடன் வயர்-ஸ்போக் வீல் பெற்றுள்ளது.

முன்பக்கத்தில் இரட்டை 296மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240மிமீ டிஸ்க் பெற்று கூடுதலாக இரட்டை சேனல் ABS வசதி கொண்டுள்ளது.

X-ADV இந்தியாவில் உள்ள ஹோண்டாவின் பிக்விங் டீலர்ஷிப்கள் வழியாக அல்லது வாடிக்கையாளர்கள் ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம்.

Related Motor News

No Content Available
Tags: Honda X-ADV 750
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ather rizta new terracotta red colours

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan