Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2020 ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த பைக் சுற்று முடிவுகள் – IMOTY 2020

by automobiletamilan
December 9, 2019
in பைக் செய்திகள்

mt-15

இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற மற்றும் ஒருங்கிணைக்கப்படுகின்ற பைக்குகளில் 2020 சிறந்த பைக் போட்டிக்கான இறுதிச் சுற்றில் பங்கேற்றுள்ள பைக்குகளை அறிந்து கொள்ளலாம். கடந்த 2019 ஆம் ஆண்டு சிறந்த பைக் மாடலாக ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த பைக்கிற்கான தேர்வுமுறையில் பைக் விலை , மைலேஜ் , தரம் , ஸ்டைல் , புதிய நுட்பங்கள் , இந்திய சாலைக்கு ஏற்ற தன்மை போன்றவற்றை கொண்டு தேர்வு செய்யப்படுகின்றது.

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களால் ஜூரி சுற்று மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், ஆட்டோ டுடே சார்பாக ராகுல் கோஷ் மற்றும் தீபயன் தத்தா, ஆட்டோஎக்ஸ் பத்திரிக்கையின் ஜாரெட் சோலோமன் மற்றும் அருப் தாஸ், பைக் இந்தியாவைச் சேர்ந்த ஆஸ்பி பதேனா மற்றும் சர்மத் கதிரி, EVO-வைச் சேர்ந்த சிரிஷ் சந்திரன், மோட்டாரிங் வோர்ல்டு சேர்ந்த கார்த்திக் வேர் மற்றும் பப்லோ சாட்டர்ஜி, அபய் வர்மா மற்றும் ரோஹித் பரத்கர் ஓவர் டிரைவ், பைக்வாலே சிங் மற்றும் விக்ராந்த் போன்றோர்கள் இடம்பெற்றுள்ளனர்.

2020 ஆம் ஆண்டின் சிறந்த பைக் பட்டியிலில் ஜூரி சுற்றில் இடம்பெற்றுள்ள மோட்டார் சைக்கிள் பட்டியல் பின் வருமாறு..,பஜாஜ் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160, பல்சர் 125, பெனெல்லி இம்பீரியல் 400, பெனெல்லி டிஆர்கே 502 எக்ஸ், பெனெல்லி லியோன்சினோ 500, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் மற்றும் எக்ஸ்பல்ஸ் 200, ஹோண்டா சிபி 300 ஆர், ஜாவா 42, கேடிஎம் 125 டியூக், கேடிஎம் 790 டியூக், கேடிஎம் ஆர்சி 125 ஏபிஎஸ், சுசுகி ஜிக்ஸர் 250 மற்றும் யமஹா எம்டி-15 போன்றவை ஆகும்.

வாக்களிப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை இப்போது இங்கே காணலாம். ஒவ்வொரு ஜூரி உறுப்பினருக்கும் மொத்தமாக 25 புள்ளிகள் வழங்கப்படுகின்றன. ஜூரி உறுப்பினர் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு அதிகபட்சமாக 10 புள்ளிகள் மட்டும் கொடுக்க இயலும். ஆனால், அதே ஜூரி உறுப்பினர் குறைந்தது ஐந்து மோட்டார் சைக்கிள்களுக்கு புள்ளிகளை வழங்க வேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும், அவர் வழங்குகின்ற முதல் இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கு ஒரே மாதிரியான புள்ளிகளை வழங்க முடியாது. எனவே, ஒவ்வொரு ஜூரி பத்திரிக்கையாளரும் சிறப்பான முறையில் சிறந்த பைக்கை தேர்வு செய்கிறார்கள்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சிறந்த பைக் மாடலாக ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 தேர்வு செய்யப்பட்டது. 2020 ஆம் ஆண்டிற்கான மாடல் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Tags: Benelli imperiale 400Yamaha MT-15
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version