Categories: Bike News

இந்தியாவில் ஜாவா பைக்குகள் விற்பனைக்கு வெளியானது

மஹிந்திரா நிறுவனத்தின் கிளாசிக் லெஜென்ட்ஸ் பிரிவின் கீழ் செயல்படுகின்ற ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்தியாவில் கிளாசிக் ரக பாரம்பரியத்தை கொண்ட ஜாவா , ஜாவா ஃபார்ட்டி டூ மற்றும் பாபர் ஸ்டைல் பெற்ற ஜாவா பெராக் என மொத்தமாக மூன்று மோட்டடார்சைக்கிளை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

1960களில் தொடங்கி இந்திய சந்தையில் கொடிகட்டி பறந்த ஜாவா பைக்குகளை மீண்டும் மஹிந்திரா அறிமுகம் செய்துள்ள நிலையில் , ஜாவா பைக்குகள் மிக கடுமையான சவாலினை ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்திடமிருந்து கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 போன்ற மாடல்களுடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. புதிதாக வெளியிடபட்டுள்ள மூன்று மாடல்களில் ஜாவா 42 மாடல் நவீனத்துவத்தை பெற்றதாகவும், ஜாவா என பெயரிடப்பட்டுள்ள மாடல் பாரம்பரியத்தை கொண்டதாகவும், பாபர் ஸ்டைலை பெற்ற மாடலை ஜாவா பெராக் எனவும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஜாவா ஃபார்ட்டி டூ மற்றும் ஜாவா என இரு மாடல்களும் இந்நிறுவனத்தின் இரட்டை  புகைப்போக்கி குழல் பெற்ற 293சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது.

கிளாசிக் பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் வகையில் வட்ட வடிவிலான முகப்பு விளக்கு, பக்கவாட்டில் இருக்கும் டூல் பாக்ஸ், பெரும்பாலான பாகங்களுக்கு க்ரோம் பூச்சூ, அகலமான பின்புற மட்கார்டு ஆகியவற்றை பெற்றுள்ள இந்த மோட்டார்சைக்கிள்களில் டபூள் கார்டில் அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பரை பெற்று முன்புறத்தில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் கூடிய  280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 153 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

14 லிட்டர் கொள்ளளவு பெற்ற பெட்ரோல் கலனை கொண்டு ஜாவா மற்றும் ஜாவா 42 மாடல்களின் எடை 170 கிலோ மட்டுமே ஆகும். ஜாவா 42 மோட்டார்சைக்கிள் ஹாலிஸ் டீல், கெலக்டிக் பச்சை, ஸ்டார்லைட் நீலம், லூமோஸ் லைம், நெபுலா நீலம் மற்றும் காமட் சிவப்பு ஆகிய 6 வண்ணங்களிலும், ஜாவா கிளாசிக் வகையில் ஜாவா கருப்பு, ஜாவா மெரூன் மற்றும் ஜாவா கிரே ஆகிய மூன்று வண்ணங்களிலும் கிடைக்கும்.

பாபர் கஸ்டம் ஸ்டைல் மாடலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜாவா பெராக் பைக்கில் 334சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த என்ஜின் பவர் வெளிப்படுத்தும் திறன் உள்ளிட்ட விபரம் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

முதற்கட்டமாக இந்த வருட இறுதி, அதாவது டிசம்பர் 2019 முதல், மஹிந்திரா நிறுவன இருசக்கர வாகனப் பிரிவின் கீழ் நாடு முழுவதும் உள்ள 105 பிரத்யேக டீலர்கள் வாயிலாக ஜாவா மோட்டார்சைக்கிள்கள் விற்பனை துவங்கப்பட உள்ளது.

ஜாவா மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்

ஜாவா – ரூ. 1.64 லட்சம்

ஜாவா 42 – ரூ. 1.55 லட்சம்

ஜாவா பெராக் – ரூ. 1.89 லட்சம்

(டெல்லி விற்பனையக விலை)

Recent Posts

புதிய ஸ்டைலில் ஹீரோ டெஸ்டினி 125 அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…

1 day ago

ஜாவா பைக்குகளின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…

1 day ago

அக்டோபர் 3ல் கியா கார்னிவல் எம்பிவி இந்திய அறிமுகம்

கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…

2 days ago

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…

2 days ago

குறைந்த விலையில் வெனியூ காரிலும் சன்ரூஃப் வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…

2 days ago

குறைந்த விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் சன்ரூஃப் வேரியண்ட் அறிமுகம்

துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…

2 days ago