Automobile Tamilan

இந்தியாவில் ரூ.9.29 லட்சத்தில் கவாஸாகி Z900 விற்பனைக்கு வந்தது

kawasaki z900 1

இந்திய சந்தையில் கவாஸாகி நிறுவனம் தொடர்ந்து புதிய பைக்குகளை வெளியிட்டு வரும் நிலையில் Z900 ஸ்போர்ட்டிவ் நேக்டூ ஸ்டைல் மாடல் ரூ.9.29 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Z900 பைக் மாடலில் 9,500rpm-ல் 125hp மற்றும் 7,700rpm-ல் 98.6Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 948cc, இன்லைன்-நான்கு சிலிண்டர் என்ஜின் மூலம் தொடர்ந்து இயக்கப்படுகிறது. இதில் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப் கிளட்ச் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்டீல் ட்ரெல்லிஸ் பிரேம் உடன் யூஎஸ்டி முன் ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன் பிரேக்கிங் இரட்டை டிஸ்க் 300 மிமீ  மற்றும் இரட்டை சேனல் ஏபிஎஸ் உடன் ஒற்றை 250 மிமீ பின்புற டிஸ்க் அமைப்பை கொண்டுள்ளது.  120/70 மற்றும் 180/55 பின்புற டயர்களில் சுற்றப்பட்ட 17 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது. Z900 பைக்கில் 17-லிட்டர் எரிபொருள் டேங்க் மற்றும் 215 கிலோ எடையை பெற்றுள்ளது.

Exit mobile version