2023 கவாஸாகி Z900RS பைக் விற்பனைக்கு வெளியானது

நியோ ரெட்ரோ ஸ்டைலை பெற்ற மேம்பட்ட புதிய கவாஸாகி Z900RS பைக்கினை ₹ 16.47 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேண்டி டோன் நீளம் மற்றும் மெட்டாலிக் இம்பீரியல் சிவப்பு என இரண்டு விதமான நிறங்களை பெற்றதாக வந்துள்ளது.

2023 Kawasaki Z900RS

மிக நேர்த்தியான ரெட்டோ ஸ்டைலை பெற்ற கவாஸாகி இசட் 900 ஆர்எஸ் மாடல் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், நேர்த்தியான பெட்ரோல் டேங்க் பெற்ற மாடல் இருவிதமான நிற கலவையை பெற்றுள்ளது. இரு பிரிவுகளை கொண்ட இண்ஸ்டூருமெண்ட் கிளஸ்ட்டரை பெற்று ஏபிஎஸ் உள்ளிட்ட அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களுடன் KTRC (Kawasaki Traction Control) வசதியை பெற்றுள்ளது.

ஸ்ட்ரீட் ஃபைட்டர் Z900 பைக்கின் அடிப்படையில் Z900RS மாடல் தயாரிக்கப்பட்டுள்ள 948cc, இன்லைன் நான்கு சிலிண்டர், திரவ குளிரூட்டப்பட்ட என்ஜின் ஆகும். RS பைக்கில் 8,500rpm-ல் 107bhp மற்றும் 6,500rpm-ல் 95Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் ஆறு வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்டீல் ட்ரெல்லிஸ் பிரேம் உடன் யூஎஸ்டி முன் ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன் பிரேக்கிங் இரட்டை டிஸ்க் 300 மிமீ  மற்றும் இரட்டை சேனல் ஏபிஎஸ் உடன் ஒற்றை 250 மிமீ பின்புற டிஸ்க் அமைப்பை கொண்டுள்ளது.  120/70 மற்றும் 180/55 பின்புற டயர்களில் சுற்றப்பட்ட 17 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது. Z900RS பைக்கில் 17-லிட்டர் எரிபொருள் டேங்க் மற்றும் 215 கிலோ எடையை பெற்றுள்ளது.

Exit mobile version