Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

கைனடிக் DX எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் யார் ?

by MR.Durai
28 July 2025, 4:31 pm
in Bike News
0
ShareTweetSend

Kinetic DX ev vs rivals

மீண்டும் கைனடிக் நிறுவனம் மின்சார பேட்டரி ஸ்கூட்டர் சந்தையில் இந்தியாவின் மிகவும் பழமையான DX பிராண்டினை எலக்ட்ரிக் வெர்ஷனாக மாற்றி ரூ.1.11 முதல் ரூ.1.17 லட்சம் வரையிலான விலையில் வெளியிட்டுள்ளது. ஆனால், போட்டியாளர்களாக உள்ள டிவிஎஸ் ஐக்யூப் 2.2Kwh, சேட்டக் 3001, விடா விஎக்ஸ்2 கோ, மற்றும் ஹோண்டா க்யூசி1 ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்ளுகின்றது என்பதனை ரேஞ்ச் மற்றும் முக்கிய விபரங்களை தொகுத்து அறியலாம்

KInetic DX vs Rivals

இங்கே வழங்கப்பட்டுள்ள மாடலை தவிர ஓலா எஸ்1 எக்ஸ் போன்ற மாடலையும் கைனடிக் டிஎக்ஸ் எதிர்கொள்ளும் நிலையில் ரேஞ்ச் 116 கிமீ உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சராசரியாக 40 கிமீ வேகத்தில் பயணித்தால் இதன் ரேஞ்ச் 70-80 கிமீ வரை கிடைக்கலாம்.

ஆனால் போட்டியாளர்களான ஐக்யூப் உண்மையான ரேஞ்ச் 75 கிமீ , சேட்டக் 3001 ஆனது 100 கிமீ வரையும், விஎக்ஸ்2 கோ மாடல் 70-75 கிமீ வரையும், மற்றும் ஹோண்டா க்யூசி 1 ஸ்கூட்டர் 45-50 கிமீ வழங்குகின்றது. இந்த மாடல்களில் விரைவு சார்ஜிங் வசதியை ஹீரோ விடா வழங்குகின்றது.

மாடல் பெயர் ரேஞ்ச் (Range) பேட்டரி திறன் (Capacity) சார்ஜ் நேரம் (0-100%)
Kinetic DX 102கிமீ-116 கிமீ 2.6 kWh 4 மணி நேரம்
TVS iQube 2.2 100 கிமீ 2.2 kWh 5 மணி நேரம்
Chetak 3001 123 கிமீ 3.1 kWh 4.5 மணி நேரம்
Hero Vida VX2 Go 94 கிமீ 2.2 kWh 3-4 மணி நேரம்
Honda QC1 80கிமீ 1.5 kWh 4 மணி நேரம்

டிஎக்ஸ் ஸ்கூட்டரில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ள நிலையில், டெலிமேட்டிக்ஸ் சார்ந்த அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றது.

கைனடிக் டிஎக்ஸ் மாடலின் விலை ஒப்பீடு

குறிப்பாக பெரும்பாலான கனெக்ட்டிவ் வசதிகள், டிஜிட்டல் கிளஸ்ட்டர், ரிவர்ஸ் மோடு உட்பட பல்வேறு அம்சங்களை பெரும்பாலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெற்றுள்ளன. ஒரு சில வசதிகளை கூடுதலாக  டிஎக்ஸ் பெற்றிருந்தாலும் கூட ஹீரோ விடா விஎக்ஸ் 2 கோ மிக குறைந்த விலையில் கிடைப்பதுடன் BAAS திட்டத்தையும் கொண்டிருக்கின்றது.

மாடல் பெயர் எக்ஸ்-ஷோரூம் விலை
Kinetic DX ₹ 1,11,499 – ₹ 1,17,499
TVS iQube 2.2 ₹1,02,470
Chetak 3001 ₹ 99,900
Hero Vida VX2 Go ₹84,990
Honda QC1 ₹ 90,022

ரேஞ்ச், பேட்டரி திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் நாம் ஒப்பீடு செய்த பார்த்த முடிவில் நிச்சியமாக கைனடிக் டிஎக்ஸ் வாங்கும் பணத்தில் போட்டியாளர்கள் ஐக்யூப் , சேட்டக் 3001 மற்றும் விஎக்ஸ்2 கோ விலை குறைவாக உள்ளன.

Related Motor News

1 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாமா ?

2025 ஆகஸ்ட் மாத விற்பனையில் டாப் 10 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள்

குறைந்த விலை ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், ஆன்ரோடு விலை, சிறப்புகள்

116 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் DX எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

ஜூலை 28., கைனடிக் DX எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகம்.!

Tags: Bajaj Chetak 3001Hero Vida VX2 GoHonda QC1Kinetic DXTVS iQube
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 Royal Enfield meteor 350 bike

GST 2.0.., ராயல் என்ஃபீல்டின் 350cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலைப்பட்டியல்

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 பைக் விலை

GST 2.0.., ராயல் என்ஃபீல்டு 450cc, 650cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலை உயர்வு..!

ரூ.97,436 விலையில் டிவிஎஸ் ஜூபிடர் 110ல் ஸ்பெஷல் எடிசன் வெளியானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விற்பனைக்கு அறிமுகமானது

20 ஆண்டுகளை கொண்டாட சிறப்பு டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகமானது

டிவிஎஸ் மோட்டாரின் என்டார்க் 150 புதிய சாகப்தம் உருவாக்கிறதா.?

ரூ.1.69 லட்சத்தில் 2025 யமஹா R15 V4 விற்பனைக்கு வெளியானது

டிவிஎஸ் என்டார்க் 150 முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

ஹீரோவின் ஜூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் முன்பதிவு, டெலிவரி விபரம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan